போடுங்கம்மா ஓட்டு... குடும்பம் குடும்பமாக வந்து வாக்களித்த சினி ஸ்டார்கள்!
சென்னை : நடிகர் விக்ரம், அருண்விஜய், விஜயகுமார் ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
7 மணிமுதல் பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றன.

மாஸ்க் கட்டாயம்
தமிழகத்தின் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கை உறை மற்றும் மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலையில் கூட்டம்
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெயிலுக்கு முன்பாக தங்களது வாக்குகளை செலுத்து விட மக்கள் மிகுந்த ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்தனர். இதனால் பெரும்பாலான வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமாபே காணப்பட்டது. இதே திரைநட்சத்திரங்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

வாக்களித்தார்
நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். மேலும், கணேஷ் வெங்கட், விமல், விஷ்ணுவிஷால் ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

அருண்விஜய் ஓட்டு போட்டார்
அதேபோல நடிகர் விஜயகுமார் மற்றும் அருண்விஜய் ஆகியோர் தனது குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார. நடிகர் விக்ரமும் தனது வாக்கை செலுத்தினார். வாக்களித்த திரைப்பிரபலங்கள் தங்களது விரலை காட்டி எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











