ரூ.1 சம்பளம்.. அண்ணாமலையின் புது அவதாரம் .. டிரெண்டாகும்புகைப்படம் !
பெங்களூர்: தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு கன்னட படத்தில் நடித்துள்ளார்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பிறந்தவர் அண்ணாமலை.
ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை தேசியக் கட்சியான பாஜகவில் சேர்ந்தார்.

அண்ணாமலை
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். அரசியலில் தீவிரமாக உள்ள அண்ணாமலை தற்போது சினிமா படத்தில் நடித்துள்ளார். கர்நாடகா சிங்கம் என அழைக்கப்படும் இவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அரபி
தற்போது அண்ணாமலை, 'அரபி' கன்னட சினிமாவில் நடித்து முடித்துள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு கைகளும் இல்லாமல், சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை புரிந்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்படுகிறது. இதில் விஸ்வாசே, நீச்சல் வீரராக நடிக்கிறார். அவருக்கு பயிற்சியாளராக, அண்ணாமலை நடித்துள்ளார்.

ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம்
இந்த கதையை கேட்டதும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று நடித்துள்ளார் அண்ணாமலை. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாத அண்ணாமலை, முதலில் சினிமா எல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறிள்ளார். ஆனால், இயக்குநரிடம் கதையை கேட்டதும், அண்ணாமலைக்கு ரொம்பவே பிடித்து போக பயிற்சியாளராக நடிக்க சம்மதித்துள்ளார்.

பாஜகவினர் குஷி
இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்களும் வெளியாகி வருகிறது. அண்ணாமலை படத்தில் நடித்துள்ள தகவலை கேட்டு பாஜகவினர் குஷியில் உள்ளனர். பாஜகவினரை தவிர்த்து இந்த படத்தில் அண்ணாமலையின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











