twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’கலகத்தலைவன்’ உதய் எப்படி பண்ணியிருக்கார்?..வாக்கிங் நேரத்தில் அமைச்சரிடம் ஆர்வமாய் கேட்ட அப்பா

    |

    சென்னை : உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு என்று அமைச்சரிடம் முதல்வர் முக ஸ்டாலின் ஆர்வத்துடன் கேட்டார்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கலகத் தலைவன்.

    ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்திருக்கும், இப்படம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 18)ந் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது.

    '’வாரிசு’’ விவகாரத்தில் நான் தலையிட முடியாது..நைசாக நழுவிய உதயநிதி ஸ்டாலின்!'’வாரிசு’’ விவகாரத்தில் நான் தலையிட முடியாது..நைசாக நழுவிய உதயநிதி ஸ்டாலின்!

    கலகத் தலைவன்

    கலகத் தலைவன்

    ஒரு தொழிற்சாலை சொந்தமாக புதுவகை கனரக வாகனத்தை உற்பத்தி செய்ய திட்டமிடுகிறது. ஆனால், அந்த வாகனத்தின் மூலம் காற்று மாசுபாடு என்பதால், அரசின் அனுமதி கிடைப்பது கடினம் என்பதை தெரிந்து கொண்ட நிறுவனம், அந்த விஷயத்தை மறைத்து அரசிடம் அனுமதி வாங்க முயற்சிக்கிறது. ஆனால், இந்த ரகசியம் வெளியில் தெரிந்தால் கனரக வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

    திரில்லர் திரைப்படம்

    திரில்லர் திரைப்படம்

    இதனால் கடுப்பான நிறுவனம், ரகசியத்தை வெளியில் கசிய விட்டது யார்? என்பதை கண்டுபிடிக்கும் வேலையை ஆரவிடம் கொடுக்கப்படுகிறது. உதயநிதி யார்? அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார்? அவருக்குப் பின்னால் இருப்பது யார்? என்ற அடுக்கடுக்கான திருப்பங்களுடன் கலகத் தலைவன் படத்தின் கதை நகர்கிறது. நேர்த்தியான திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தில் உதயநிதி அட்டகாசமாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

    ரிவ்யூ கேட்ட முதல்வர்

    இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது, தன்னுடன் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கலகத் தலைவன் படம் எப்படி இருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு, அமைச்சர் படம் ரொம்ப நல்லா இருக்கு, பொதுவாக பாட்டு வரும் போது பலர் எழுந்து போவாங்க, அப்படி இல்லாமல் அனைவரும் படத்தை பார்த்து ரசித்தனர் என்றார். அமைச்சரிடம் கலகத் தலைவன் படம் பற்றி முதலமைச்சர் விமர்சனம் கேட்ட வீடியோ சோசியல் மீடியாவில் டிராண்டாகி வருகிறது.

    படக்குழுவினரை வாழ்த்தினார்

    படக்குழுவினரை வாழ்த்தினார்

    கலகத் தலைவன் படம் வெளியீட்டுக்கு முன்பே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் சிறப்பு காட்சியை பார்த்தார். படத்தை பார்த்து படம், அருமையாக இருப்பதாகவும், சமூக அக்கறையோடு நேர்த்தியான படைப்பை கொடுத்திருப்பதாகவும் படம் வெற்றிபெற படக்குழுவினரை வாழ்த்துவதாகவும் தெரிவித்து இருந்தார்.

    English summary
    Tamil Nadu chief minister MK Stalin asks the review about KalagaThalaivan during his morning walk. Video trending on social media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X