இசை பொக்கிஷம் இளையராஜா..மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு..முதல்வர் வாழ்த்து !

சென்னை : மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Ilayaraja ராஜ்யசபா M.P-யாக நியமனம்... மகிழும் தமிழகம் *Kollywood | Filmibeat Tamil

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் தனக்கென தனக்கென தனி இசை ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் இசைஞானி இளையராஜா. தனது முதல் திரைப்படத்திலேயே "அடி ராக்காயி...மூக்காயி..குப்பாயி... என்ற பாடலில் குழு பெண்களின் கோரஸை வைத்து இசை கோலம் போட்டவர் இளையராஜா. இசைப்பிரியர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இசைஞானி.

அவருக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.

மாநிலங்களவை நியமன எம்பிTamil Nadu chief minister MK stalin congratulates ilayarajaTamil Nadu chief minister MK stalin congratulates ilayaraja

மாநிலங்களவை நியமன எம்பிTamil Nadu chief minister MK stalin congratulates ilayarajaTamil Nadu chief minister MK stalin congratulates ilayaraja

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அதன்படி இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளையராஜாவின் அற்புத படைப்பாற்றல்

இளையராஜாவின் அற்புத படைப்பாற்றல்

இளையராஜா, மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். தலைமுறைகளை கடந்து இளையராஜாவின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருவதாகவும், எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள் என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனம் கவர்ந்த இசைஞானி

மனம் கவர்ந்த இசைஞானி

அதேபோல, நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இசை உலகின் நாயகனாக திகழ்ந்து, எண்ணற்ற மக்களின் மனம் கவர்ந்த இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுகள். மக்கள் சேவையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். பலரும் இசை நாயகன் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X