கலகத் தலைவனை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..படம் உங்களை ஏமாற்றாது!
சென்னை : கலகத் தலைவன் படத்தை பார்த்த முக ஸ்டாலின், உதயநிதியை மற்றும் இயக்குநரை வெகுவாக பாராட்டினார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் நிதி அகர்வால், பிக் பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

உதயநிதி ஸ்டாலின்
இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதிபடம் மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. ஆர்டிக்கள் 15 இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

கலகத் தலைவன்
மீகாமன், தடம் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனியுடன் கைகோத்த உதயநிதி கலகத் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

வாழ்த்திய முதல்வர்
நாளை திரையரங்கில் வெளியாக உள்ள கலகத் தலைவன் படத்தை தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் படக்குழுவினருடன் இணைந்து படத்தை பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக கலகத் தலைவன் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

படம் உங்களை ஏமாற்றாது
நாளை வெளியாக உள்ள கலகத் தலைவன் திரைப்படத்தை காண இரண்டு நாட்களுக்கு முன்பே புக்கிங் தொடங்கியது. இசைவெளியீட்டு விழாவில் பேசிய மகிழ் திருமேனி, உதயநிதி எப்பொழுதும் பணிவாக இருக்க கூடிய நபர், அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். இந்த 10 வருடத்தில் அவர் தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான பல கதாபத்திரங்களை ஏற்று அதை நம்பும் படி உருவாக்கியுள்ளார். இந்த படமும் அப்படி தான் இருக்கும், இந்த படம் உங்களை ஏமாற்றாது என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











