முதல்வரான அடுத்த நொடியே.. கொஞ்சம் கூட யோசிக்காமல்.. விஜய் செய்த செயல்!
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். ஆளுநர் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விஜய், முதல்வராக தனது புதிய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். பதவியேற்ற உடனேயே மக்கள் நலன் தொடர்பான முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதிரடி காட்டிய விஜய், மேடையில் செய்த ஒரு சின்ன விஷயம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிரெண்டாகும் வீடியோ: ஆளுநரின் பதவிப்பிரமாண நிகழ்ச்சி முடிந்ததும், மேடையில் இருந்த நாற்காலி மற்றும் சோபாக்களை அகற்ற பணியாளர்கள் வந்தனர். பலரும் சேர்ந்து சோபாவை நகர்த்திக் கொண்டிருந்ததை பார்த்த விஜய், எந்த தயக்கமும் இல்லாமல் தானாக முன்வந்து அந்த சோபாவை தூக்கினார். இதைப்பார்த்த அங்கு இருந்த அதிகாரிகள் அவரின் பின்னாலே சென்று தடுத்தனர். முதல்வராக பதவியேற்ற சில நிமிடங்களிலேயே எதை பற்றியும் யோசிக்காமல், மிகவும் எளிமையாக நடந்துகொண்ட விஜயின் இந்த செயல் அங்கிருந்தவர்களையும், இணையவாசிகளையும் கவர்ந்துள்ளது. பலர் எங்க தலைவர் இப்படித்தான் என்றும், எங்க தலைவரை பாத்தீங்களா என்றும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். தற்போது அந்த காட்சி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

3 முக்கிய கையெழுத்து: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே10ந் தேதியான இன்று காலை 10 மணிக்கு தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யை தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் என 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றவுடன் மூன்று முக்கிய கோப்புகளில் மேடையிலேயே கையெழுத்திட்டார் தவெகவின் முக்கியமான வாக்குறுதியான வீடுகளுக்கு 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் போதை பொருள் தடுப்புப் படை திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.
Annovv…Ena na panra 😂 pic.twitter.com/Ve0S8Ut4G2
— Maddy Madhav (@MaddyMadhav_) May 10, 2026


Click it and Unblock the Notifications