வேல்ஸ் வெற்றி விழா.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையால் விருது வாங்கிய கோமாளி படக்குழு!

Recommended Video

Sid SriRam Live performance வேல்ஸ் வெற்றி விழா

சென்னை: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஐசரி கணேஷுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்து வருகிறது.

அவர் தயாரிப்பில் வெளியான ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் 100 நாட்கள் திரையில் ஓடியதை முன்னிட்டு வேல்ஸ் வெற்றி விழா நேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயம்ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்ட கோமாளி படக்குழுவினருக்கு விருது வழங்கினார்.

கோமாளி

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, ஆனந்தி, சாரா நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வெற்றி பெற்றது.

100 நாள்

இப்போதெல்லாம் படம் வெளியான 3வது நாளே வெற்றி கொண்டாட்டத்தை படக்குழு கடமைக்காக நடத்தி விடுகின்றனர். இந்நிலையில், ஜெயம் ரவியின் கோமாளி 100 நாட்கள் திரையில் ஓடியிருப்பது சாதனையான விஷயம் தான். 100வது நாளை முன்னிட்டு, ஜெயம் ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் வேல்ஸ் வெற்றி விழாவில் கலந்து கொண்டனர்.

வெற்றி வேல்ஸ்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியான கோமாளி 100 நாட்களையும், பப்பி, 25 நாட்களையும் கடந்து வெற்றி நடை போடுகிறது. அடுத்ததாக, கெளதம் மேனனின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை ரிலீஸ் செய்ய அந்நிறுவனம் உதவி செய்துள்ளது. மேலும், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா படம் மற்றும் சுமோ படம் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது. நேற்று நடந்த வெற்றி விழாவில், சீறு, சுமோ படங்களின் டிரைலர் மற்றும் ஜோஷ்வா படத்தின் டீசர் ஒளிபரப்பப்பட்டது.

முதல்வர் கையால் விருது

கோமாளி படம் 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டி வரும் நிலையில், வெற்றி விழாவை ஐசரி கணேஷ் நேற்று மாலை நடத்தினார். அதில், கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோமாளி படக்குழுவுக்கு விருது வழங்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X