திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த விஜய்.. வேறலெவலில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் திருமண வரவேற்பு விழாவில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

Recommended Video

Thalapathy Vijay Met CM MK Stalin | AGS Family Reception | Thalapathy Vijay | Oneindia Tamil

கல்பாத்தி அகோரம் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு விழா இன்று மாலை நடைபெற்றது. அதில், நடிகர் விஜய் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் சந்தித்து, கைகொடுத்து பேசிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

படு பிசியில் விஜய்

படு பிசியில் விஜய்

வரும் ஏப்ரல் 13ம் தேதி நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் வில்லனாக டான் ஷைன் சாக்கோ நடித்துள்ளனர். பீஸ்ட் படத்தின் ரிலீஸ் மற்றும் தளபதி 66 படத்தின் பூஜை என படு பிசியில் உள்ளார் விஜய்.

தளபதி 66 பூஜை

தளபதி 66 பூஜை

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 66 படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பட பூஜையில் கலந்து கொண்டனர். ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு திருஷ்டி உடைத்த போட்டோக்கள் வேற லெவலில் டிரெண்டாகின.

கல்பாத்தி மகள் திருமணம்

கல்பாத்தி மகள் திருமணம்

நடிகர் விஜய்யின் பிகில் படத்தை கல்பத்தி எஸ் அகோரமின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. அர்ச்சனா கல்பாத்தி ஆரம்பம் முதல் இறுதி வரை நடிகர் விஜய்யின் பிகில் படத்தை சூப்பராக புரமோட் செய்து வெளியிட்டார். இந்நிலையில், கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் விஜய் சந்திப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் விஜய் சந்திப்பு

கல்பத்தி அகோரம் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டனர். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததும் அவருக்கு வணக்கம் வைத்த நடிகர் விஜய் அவருடன் கைக்குலுக்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

தளபதி 66 படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் காலை முதலே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய்யின் சந்திப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X