Don't Miss!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- News
அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு விழா.. நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் - ரியாஸ்தீன் ஷேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், மணமக்களுக்கு அவர் பரிசு வழங்கினார். ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின் எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

கடந்த மாதம் திருமணம்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதீஜாவுக்கும் இசைக் கலைஞர் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. மே 6ம் தேதி எளிமையான முறையில் நடந்த திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்

கேன்ஸில் பங்கேற்பு
உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு தனது இயக்கத்தில் உருவான Le Musk எனும் VR தொழில்நுட்பத்துடன் உருவான படத்தை அங்கே திரையிட ஏ.ஆர். ரஹ்மான் தனது படக்குழுவினருடன் சென்றிருந்தார். ரெட்கார்ப்பெட்டில் கமல்ஹாசன், மாதவன் உள்ளிட்ட தமிழ் சினிமா ஆளுமைகளுடன் அவர் அங்கே ராஜ நடை போட்டார்.

திருமண வரவேற்பு
இந்நிலையில், ஜூன் 10ம் தேதியான இன்று செங்கல்பட்டு மாவட்டம், ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகள் கதீஜா ரஹ்மான் - ரியாஸ்தீன் ஷேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமகள் கதீஜா ரஹ்மான் மற்றும் மணமகன் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவை மனமார வாழ்த்தினார். மேலும், புதிதாக திருமணமான தம்பதியினருக்கு பரிசாக மரக்கன்று பசுமைக்கூடையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

குடும்பத்துடன் பங்கேற்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி என குடும்பத்துடன் கலந்து கொண்டார் முதலமைச்சர். மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இசையனைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் என ஒட்டுமொத்த குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

நயன்தாரா திருமண வரவேற்பு
நடிகை நயன்தாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்தில் கலந்து கொள்ளாத நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரியாளர்கள் மற்றும் திருமணத்தில் கலந்து கொள்ளாத சில பிரபல நடிகர்களும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.