நயன்தாரா திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.. எங்கே இருக்கிறார் தெரியுமா?

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

Recommended Video

Nayanthara Marriage | மொதல்ல phone-ன கொடுங்க, சங்கடத்தில் பிரபலங்கள்! #Celebrity | Filmibeat Tamil

தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான், கேரளாவில் இருந்து நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

நேரில் அழைப்பு

நேரில் அழைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி திருமணத்துக்கு அழைத்திருந்தனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

முதலமைச்சர் பங்கேற்கவில்லை

முதலமைச்சர் பங்கேற்கவில்லை

இந்நிலையில், இன்று காலை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நயன்தாரா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைமை செயலகத்தில் முதலமைச்சர்

தலைமை செயலகத்தில் முதலமைச்சர்

தலைமைச்செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ. 1627 கோடி மதிப்பீட்டிலான பாரத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் முதலகுறிச்சி கிராம பஞ்சாயத்தில் கண்ணாடி இலை கம்பிவடம் பதிக்கும் பணியை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா

வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா

திருமணத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை அது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி கலந்து கொண்டாரா

உதயநிதி கலந்து கொண்டாரா

சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கேமியோவாக வந்து செல்வார். அதன் பிறகு நண்பேன்டா, இது கதிர்வேலனின் காதல் உள்ளிட்ட படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்நிலையில், நயன்தாராவின் திருமணத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றாரா இல்லையா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X