நடிகர் சங்க தேர்தலில் வெற்றி.. முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற விஷால் டீம்!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
Recommended Video
2019ம் ஆண்டு நடந்த இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என வழக்கு போடப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

நடிகர் சங்க தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெற்றது. பாண்டவர் அணியினர் மற்றும் சங்கரதாஸ் அணியினர் என இரு பிரிவுகளுக்கு இடையே இந்த தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு காரணமாக வாக்கு எண்ணிக்கையானது நடைபெறாமல் இருந்தது இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

பாண்டவர் அணி வெற்றி
இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாண்டவர் அணியை சேர்ந்த நாசர் தலைவராகவும், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், துணைத் தலைவர் பூச்சி முருகன், மனோபாலா கோவை சரளா, நடிகை லதா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

முதலமைச்சருடன் சந்திப்பு
இந்நிலையில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் புகைப்படம் தற்போது டிரெண்டாகி வருகிறது. நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி மற்றும் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலினும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.

முதலமைச்சர் உறுதி
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசுகையில், நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் புதிதான நிர்வாகம் பொறுப்பேற்று இருக்கும் மிகப்பெரிய வெற்றியோடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறோம், என்றும் தெரிவித்தார். சமீபகாலமாக நடிகர் சங்க தேர்தல் நிகழ்வு பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்ததாகவும், அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ அதை செய்து தருவதாகவும் தெரிவித்ததாக கூறினார்.

முதல் வேலை
தேர்தல் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை தந்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து பேசிய நாசர், முதலாவதாக பாதியில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கக்கூடிய நடிகர் சங்க தேர்தல் கட்டிடத்தை முடிப்பதே எங்களுடைய நடவடிக்கையாக இருக்கும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











