Vijay CM: கருப்பு கோர்ட்டை கழற்றி வேட்டியில் கம்பீரமாக வந்த முதல்வர்.. இது தான் ரியல் தமிழ் லுக்!

சென்னை: விஜய் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றதில் இருந்து கருப்பு கோர்ட், வெள்ளை சர்ட்டுடன் வலம் வந்தார். பதவியேற்றதில் இருந்து கோர்ட்டுன் வலம் வந்த இவர், பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து ஜெகதீஷ் பழனிசாமி சகோதரரின் இல்ல விழாவில் கலந்து கொண்டுவிட்டு, தலைமைச்செயலகத்தில் அதை உடையில் வந்தார். அந்த வீடியோ இணையத்தல் டிரெண்டாகி வருகிறது.

முதலமைச்சர் விஜய்: தமிழக அரசியல் களத்தில் களமிறங்கிய நடிகர் விஜய் தனது பிரச்சாரங்களில் வெள்ளை சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்து வந்தது பெரிய அளவில் ட்ரெண்டானது. அது ஒரு சாதாரண உடை தேர்வாக இல்லாமல், ஒரு அரசியல் அடையாளமாகவே பேசப்பட்டது. அதன் தாக்கம் தேர்தல் நாளிலும் காணப்பட்டது. வாக்களிக்க வந்த பல பிரபலங்கள் அதே "டிரஸ் கோடு"வில் வந்து வாக்களித்தனர். பிரபலங்கள் மட்டுமில்லாமல் மக்களும் அதே நிறத்தில் வந்து வாக்களித்தனர்.

CM Vijay traditional look

பட்டு வேட்டி சட்டையில்: அதன்பின் விஜய் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றதும் கருப்பு நிறத்தில் கோர்ட் சூட் அணிந்து தனது பதவியேற்றார். பதவியேற்பு விழாவிலும் அவரது உடை பலரால் பேசப்பட்டது. தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே கோர்ட் சூட்டில் சட்டப்பேரவையில் விஜய் கலந்து கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். பதவியேற்றத்தில் இருந்து கோர்ட் சூட்டில் இருந்த முதல்வர் விஜய் இன்று பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து முதலமைச்சர் விஜய், தனது மேலாளர் ஜெகதீஷ் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஒரு புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டார்.

இதையடுத்து தலைமைச்செயலகத்திற்கு வந்த விஜய், மாநில தலைமை தகவல் ஆணையர் திரு. முகமது ஷகில் அக்தர், இ.கா.ப., (ஓய்வு), மாநில தகவல் ஆணையர்கள் திரு. அபய் குமார் சிங், இ.கா.ப., (ஓய்வு), திரு. பி. தாமரைக்கண்ணன், இ.கா.ப., (ஓய்வு), திரு. ஆர். பிரியாகுமார், திரு. கே. திருமலைமுத்து, திரு.வி.பி. இளம்பரிதி, திரு. எம். நடேசன், திரு. ஏ. விஜயராம் ஆகியோரை சந்தித்து பேசினார். பாரம்பரிய தோற்றத்தில் வந்த அவரை பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் "வேட்டியில் செம்ம கம்பீரம்" என்று ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Read more about: cm vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X