தேர்தல் ஓவர்.. ஜனநாயகன் படத்துக்கு இன்று சென்சார் கிடைக்குமா?.. தனுஷ், சூர்யா யாருக்கு சிக்கல்?

சென்னை: இந்த ஆண்டுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் முழுவதும் லீக் ஆன நிலையிலும், இன்னமும் படத்திற்கான சென்சார் வழங்கப்படவில்லை என்கிற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

தேர்தல் நேரம் என்பதால் தவெக தலைவர் விஜய் நடித்த ஜன நாயகன் படம் வெளியாகாது என்றனர். ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜன நாயகன் படத்துக்கான சென்சார் சான்றிதழை மத்திய சான்றிதழ் வாரியம் இன்று வழங்குமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tamil Nadu Election Over Will Vijay s Jana Nayagan get Censor Today
Photo Credit:

முழுப் படமும் லீக்கான நிலையில் கூட படத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கவில்லை என்றும் ஜன நாயகன் படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சிவகாசி vs அமர்க்களம் ரீ ரிலீஸ் போட்டி: ஏப்ரல் 24ம் தேதியான இன்று தமிழ் சினிமாவில் பல புதிய சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகி உள்ளன. அதே போல அஜித் குமாரின் அமர்க்களம் படம் மற்றும் விஜய்யின் சிவகாசி உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன. சிவகாசி படத்திலும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைந்திருக்கும். அதே போல இந்த படத்திலும் பிரகாஷ் ராஜ் வில்லன் என்பதால் விஜய் ரசிகர்கள் சிவகாசி படத்தை தியேட்டரில் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் ரசிகர்கள் ஏற்கனவே அமர்க்களம் படத்தை வேறலெவலில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

ஜன நாயகன் சென்சார் கிடைக்குமா?: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்க முன் வந்த போதே ஏகப்பட்ட ரிஸ்க் இருக்கும் என விஜய் சொல்லியும் தைரியமாக நம்பிக்கையுடன் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்தார். ஆனால், பெரும் நஷ்டத்தை மட்டுமே விஜய்யின் கடைசி படம் அவருக்கு கொடுத்துள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நிறைவடைந்த நிலையில், ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஏதுவாக சான்றிதழ் இன்று கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெள்ளிக்கிழமை மிஸ் ஆனால், மீண்டும் திங்கட்கிழமை தான் ஜன நாயகன் படத்துக்கான சான்றிதழ் கிடைக்க வாய்ப்பு என்கின்றனர்.

கர படத்துக்கு சிக்கல் வருமா?: ஜன நாயகன் படத்துக்கு இன்று சான்றிதழ் கிடைத்தாலும் படத்தை ஏப்ரல் 30ம் தேதி வெளியிட படக்குழு தயார் நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடித்துள்ள 'கர' படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜன நாயகன் அதே நாளில் வெளியானால் கர படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்கின்றனர்.

Tamil Nadu Election Over Will Vijay s Jana Nayagan get Censor Today

கருப்பு படத்துக்கு சிக்கல்?: ஒருவேளை ஜன நாயகன் சான்றிதழ் கிடைப்பதில் மேலும், தாமதம் ஆனால், மே 14ம் தேதி சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படத்துக்குப் போட்டியாக ஜன நாயகன் படம் வெளியானால் அந்த படத்துக்கும் சிக்கல் என்கின்றனர். இதில், வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே ஜன நாயகன் லீக் ஆன நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் திருட்டுத் தனமாக படத்தை பார்த்த நிலையில், ஜன நாயகன் படத்துக்கான வசூலே குறைந்து அந்த படத்துக்கே பெரிய சிக்கல் தான் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X