தமிழ்நாடு தேர்தல் 2026: சியான் முதல் VJS வரை.. எந்த பிரபலம் எங்க எத்தனை மணிக்கு ஓட்டு போட போறாங்க!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இப்படியான நிலையில் திரை பிரபலங்கள் பலரும் எத்தனை மணிக்கு எங்கு தங்களது வாக்கினை செலுத்தப் போகிறார்கள் என்ற தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.
இசைஞானி இளையராஜா, தி நகரில் உள்ள சாரதா வித்யா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை காலை 10.30 மணியளவில் செலுத்தவுள்ளார். நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மகன் நடிகர் அருண் விஜய் என இருவரும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள கிருத்துவ மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலை 8 மணிக்கு வாக்கு செலுத்த உள்ளனர்.

குஷ்பு குடும்பம்: நடிகர் பிரபு மற்றும் விக்ரம் பிரபு என இருவரும் தி நகரில் உள்ள டக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் காலை 9 மணிக்கு வாக்கு செலுத்த உள்ளனர். நடிகை குஷ்பு மற்றும் அவரது கணவர் இயக்குநர் சுந்தர் சி என இருவரும் காலையில் 7 மணிக்கே, ஸ்ரீ ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வாக்கு செலுத்த உள்ளனர். இதில் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளர் ஆவார். நடிகர் சத்யராஜ் காலை 10 மணியளவில் நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் வாக்களிக்கவுள்ளார். இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்திரன் தி நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் காலை 10.30 மணிக்கு வாக்கு செலுத்த உள்ளார். சென்னை எல்டாம்ஸ் ரோடு, திருவள்ளுவர் சாலை சந்திப்பில் இருக்கும் சென்னை உயர்நிலைப்பள்ளியில், காலை 7.45 முதல் 8 மணிக்குள்,மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் MP , தன்னுடைய வாக்கை பதிவு செய்யவிருக்கிறார்
விஜய் சேதுபதி: அதேபோல் விக்ரம் மற்றும் விக்ரம் பிரபு இருவரும் பெசன்ட் நகரில் உள்ள பெசன்ட் தியோசபிகல் பள்ளியில் காலை 8 மணி அளவில் வாக்கு செலுத்தவுள்ளனர். அதர்வா காலை 10 மணியளவில் வளசரவாக்கத்தில் உள்ள லா சாட்லைன் பள்ளியில் வாக்கு செலுத்த உள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கீழ்பாக்கத்தில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணி அளவில் வாக்கு செலுத்த உள்ளார். நடிகர் பவானி ஸ்ரீ மதியம் 12.30 மணியளவிலும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பிற்பகல் 2.30 மணியளவிலும் தி நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் வாக்கு செலுத்த உள்ளனர்.

ஆதுல்யா : நடிகர் பிரதீப் ரங்கநாதன் மடிப்பாக்கத்தில் உள்ள கிங் பள்ளியில் காலை 10 மணி அளவில் வாக்கு செலுத்த உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தி நகரில் உள்ள சி.டி. நாயகம் தி நகர் உயர்நிலைப் பள்ளியில் மதியம் 2.30 மணியளவில் வாக்கு செலுத்த உள்ளார். அதேபோல் நடிகை ஆதுல்யா கோவை வடவள்ளியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை 11 மணியளவில் வாக்கு செலுத்தவுள்ளார்.


Click it and Unblock the Notifications