twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்நாட்டில் டேம் 999' படத்துக்கு 6 மாதம் தடை நீடிப்பு

    By Mayura Akilan
    |

    சென்னை: சர்ச்சைக்குரிய டேம் 999 ஆங்கிலத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்று சித்தரிக்கப்பட்ட ஆங்கில திரைப்படமான டேம் 999 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு தமிழ்ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அந்த திரைப்படத்தை திரையிட நவம்பர் 24-ல் தமிழக அரசு தடை விதித்தது. முதலில் 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரைப்படத்தின் இயக்குநர் சோஹன்ராய் தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திரைப்படத்திற்கான தடையை ஏன் நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விளக்க மளிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சென்னை வந்து தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    6 மாதம் தடை

    இந்த நிலையில் திரைப்படத்திற்கான தடையை தமிழக அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள சோஹன்ராய், நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

    English summary
    The Tamil Nadu government has decided to extend the suspension on the screening of the controversial film Dam 999 by six months. Breach of peace and law and order due to screening of the film is the prime reason for extending the ban, according to an official.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X