»   »  பொங்கல் ஸ்பெஷல்: தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

பொங்கல் ஸ்பெஷல்: தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சியைத் திரையிட அனுமதி அளித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையானது 3 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையையொட்டி ரஜினிமுருகன், கதகளி, தாரை தப்பட்டை மற்றும் கெத்து ஆகிய 4 படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வருகின்ற 15.1.2016 தொடங்கி 21-1-2016 வரை சுமார் 7 நாட்களுக்கு அனைத்துத் திரையரங்குகளிலும் கூடுதலாக ஒரு காட்சியைத் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

Tamil Nadu Government Allows Special show

வழக்கமாக 4 காட்சிகளை மட்டுமே திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் அதனை முன்னிட்டு ஒரு காட்சியை அதிகரித்துக் கொள்ள அனுமதி கேட்டு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களின் வேண்டுகோளை முன்னிட்டு 15-1-2016, 16-1-2016, 17-1-2016 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கும், 18-1-2016, 19-1-2016, 20-1-2016, 21-1-2016 ஆகிய தேதிகளில் மேட்னி காட்சியாக மதியம் 2.30 மணிக்கும் சிறப்புக காட்சிகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் தகவலை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை மற்றும் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அறிக்கை விட்டு உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

அரசின் இந்த அனுமதியானது தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

English summary
Tamil Nadu Government Now Allows Additional Shows Screening in all Theaters, for Pongal Festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil