அண்ணன் யாரு தளபதி.. லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இருக்காது என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி லியோ படக்குழுவினரையும் விஜய் ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tamil Nadu Government gives permission for Leo special shows

தினமும் 5 காட்சிகளை திரையிட தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை காட்சி கண்டிப்பாக இருக்கும் என தெரிகிறது. அதன் டைமிங் உள்ளிட்ட விபரங்களை விரைவில் தியேட்டர்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ உலகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தை வரும் அக்டோபர் 19ம் தேதி முதல் பண்டிகை நாட்களை முன்னிட்டு வெளியிட உள்ளதால் தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ளது.

அதில், லியோ படம் வெளியாகும் அக்டோபர் 19ம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதியும், 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.

Tamil Nadu Government gives permission for Leo special shows

அந்த மனுவை விசாரித்து பார்த்த வருவாய் துறை அதிகாரி ஒட்டுமொத்தமாக அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினமும் 5 சிறப்பு காட்சிகளுக்கு மட்டும் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அக்டோபர் 19ம் தேதி முதல் காட்சி 4 மணிக்கு வெளியாகுமா? அல்லது காலை 7 மணிக்கு வெளியாகுமா? என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால், 7 மணிக்கு லியோ திரைப்படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் படத்துக்கே அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குத் தான் முதல் காட்சி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதை வைத்து விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் மாஸ் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

Tamil Nadu Government gives permission for Leo special shows

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X