Japan Special Show - கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு ஜாக்பாட்.. சிறப்பு காட்சிக்கு அனுமதி..
சென்னை: Japan Special Show (ஜப்பான் சிறப்பு காட்சி) கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.
பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டாக அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமும் வித்தியாசமாக அமைந்தது. அதேபோல் லிங்குசாமி இயக்கத்தில் நடித்த பையா படமும் ஹிட்டானது. இப்படி அறிமுகமான புதிதிலேயே வெரைட்டியான கதைகள் அவருக்கு கிடைத்தது.

செம வருடம்: கார்த்திக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. அவர் நடித்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் மெகா ஹிட்டாகின. அதுமட்டுமின்றி மூன்று படங்களுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் எல்லோருக்கும் ஃபேவரைட் என்பதால் கார்த்தியை மேலும் பலர் ரசிக்க ஆரம்பித்தனர்.
கார்த்தியின் ஜப்பான்: அவர் தற்போது குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்திருக்கிறார். படமானது தீபாவளியை முன்னிட்டு நவம்பர் பத்தாம் தேதி ரிலீஸாகிறது. இப்படம் கார்த்திக்கு 25ஆவது படமாகும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.
தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் மட்டுமின்றி ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டனும் ஜப்பானில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராஜுமுருகன் இயக்கம் என்பதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
சிறப்பு காட்சிக்கு அனுமதி: இந்நிலையில் ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. நவம்பர் பத்தாம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதிவரை தினசரி ஐந்து காட்சிகள் திரையிட்டுக்கொள்ளலாம் என்றும்; முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











