தி கேரளா ஸ்டோரி படம் பார்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை : தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்த தமிழக ஆளுநர் ரவி, இந்த திரைப்படம் ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி.
இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி திரையரங்கில் வெளியானது

தி கேரளா ஸ்டோரி : பாலிவுட் நடிகை அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்துள்ள படம் தி கேரளா ஸ்டோரி. இதில், கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதை களத்தை கொண்டுள்ளது. இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.
அரசிடம் விளக்கம் : தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்ததை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்காள அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும்? அனைத்து வகையான மக்கள் உள்ள இந்த நாட்டின் பல பகுதிகயில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்று மேற்குவங்க அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.
போலீஸ் பாதுகாப்புடன் : தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' படம் ரிலீஸான திரையரங்குகள் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால்,தமிழகத்தில் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் இப்படம் ஒரு சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

பாராட்டிய ஆளுநர் : இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தியேட்டரில், தி கேரளா ஸ்டோரி படத்தை தனது மனைவியுடன் பார்த்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி, கொடூரமான உண்மையை அம்பலப்படுத்தியதற்கு நன்றி என்று படக் குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











