சர்தார், பிரின்ஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. நாளை முதல் அக்27 வரை தினம் 7 காட்சிகள்.. அரசு அனுமதி

சென்னை: வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளதால் சினிமா ரசிகர்களுக்கான புதிய படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

தமிழில் கார்த்தி, சிவகார்த்தியன் ரசிகர்களுக்கு சர்தார், பிரின்ஸ் திரைப்படங்கள் நாளை முதல் வெளியாகின்றன.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை தினத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். தீபாவளி தினத்தில் வெளியாகும் படங்களை பார்க்க ரசிகர்களிடமும் அதிக ஆர்வம் காணப்படும். பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செல்வதும், மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒன்றாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இந்தாண்டு கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் மட்டுமே தமிழில் வெளியாகின்றன. அதன்படி, கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படங்கள் நாளை (அக் 21) திரையரங்குகளில் வெளியாகின்றன.

திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள்

திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள்

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு திரையரங்களில் சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அதன்படி, நாளை (அக்.21) முதல் 21ம் தேதி சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. தினமும் 7 காட்சிகள் வரை திரையிட்டுக் கொள்ளலாம் என்றும் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கார்த்தி, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், நாளை FDFS பார்க்கவும் ரசிகர்களிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

FDFS புக்கிங் ஓப்பன்

FDFS புக்கிங் ஓப்பன்

இந்நிலையில், அரசின் அறிவிப்பை தொடர்ந்து திரையரங்குகளில் FDFSக்கான டிக்கெட் புக்கிங்கள் தொடங்கின. இதில், பெரும்பாலான திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் மட்டும் அதிகாலை 5 மணிக்கு வெளியாகிறது. கார்த்தியின் சர்தார் படத்தின் FDFS காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனையடுத்து ரசிகர்கள் FDFSக்கான டிக்கெட்டுகளை புக்கிங் செய்வதில் ஆர்வமாக இருக்கின்றனர். நாளை வெள்ளிக்கிழமை தவிர்த்து சனி, ஞாயிறு, தீபாவளி தினமான திங்கட்கிழமை வரை விடுமுறை நாட்கள் என்பதால், பிரின்ஸ், சர்தார் படங்களுக்கான டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி

திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி

தீபாவளி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்றால், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றனர். இந்தாண்டில் அடுத்தடுத்து வெளியான வலிமை, ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், கேஜிஎஃப், விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள், திரையரங்குகளுக்கு மக்களை வரவைத்ததுடன் வசூலையும் வாரிக் கொடுத்தது. இதனால் கலக்கத்தில் இருந்த திரையரங்க உரிமையாளர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில், தற்போது தீபாவளி சிறப்புக் காட்சிகளுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது, அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X