Leo Success Meet: லியோ வெற்றி விழா கொண்டாட்டம்.. காவல்துறை போட்ட அந்த கண்டிஷன்!

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழாவை நடத்த காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வசூலை அள்ளி வருகிறது.

Tamil nadu police permission for vijays leo movie success meet

இப்படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும், ஹரோல் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுனும், லியோ தாஸ் கதாபாத்திரத்தில் விஜய்யும் நடித்துள்ளனர்.

லியோ குவியும் விமர்சனம்: ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு வாரமான போதும், இந்த படம் குறித்த செய்திகள், சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன. லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாஸ்டர்,கைதி, விக்ரம் படத்தைப் போல இந்த படம் இல்லை என்றும். நரபலி கதையை உள்ளே நுழைத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை லோகேஷ் கெடுத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் கிங்: மேலும், படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறை, கெட்டவார்த்தை, இரண்டாம் பாதி ரொம்ப மோசம் என தொடர்ந்து பல விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்த போதும் படம் 500க்கு மேல் வசூலாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. வாரிசு திரைப்படம் குறைவான வசூலை பெற்ற நிலையில் இத்திரைப்படம் வசூலை அள்ளி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளார்.

சக்சஸ் மீட்: இந்நிலையில், லியோ படத்தின் மகத்தான வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் பிரம்மாண்ட விழா நடத்த படக்குழு திட்டமிட்டது. இதற்கு தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கி உள்ளதால், நவம்பர் 1-ந் தேதி சக்சஸ் மீட் நடைபெற உள்ளது. அந்த வெற்றி விழாவில், 200 முதல் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், பாதுகாப்பு காரணம் கருதி பேருந்தில் ரசிகர்கள் வர அனுமதி இல்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

குஷியில் பேன்ஸ்: லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவை பாதுகாப்பு காரணம் காட்டி தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்த நிலையில், தற்போது அதே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சக்சஸ் மீட் நடைபெற உள்ளதால், ரசிகர்கள் துள்ளி குதித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X