twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்.. 2009 முதல் 2014 வரை யாருக்கெல்லாம் விருது.. மொத்த லிஸ்ட் இதோ!

    |

    சென்னை: கடந்த 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா வரும் செப்.4ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    அதற்கான அரசாணை தற்போது வெளியாகி உள்ளது. 2009, 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 என மொத்தம் 5 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளை வழங்க உள்ள நிலையில், யாரு யாருக்கு என்ன என்ன விருதுகள் என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

    தோல்விக்கு பொறுப்பேற்று முழு சம்பளத்தையும் மறுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்: பாய்காட் விபரீதங்கள்தோல்விக்கு பொறுப்பேற்று முழு சம்பளத்தையும் மறுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்: பாய்காட் விபரீதங்கள்

    2009ம் ஆண்டுக்கான விருதுகள்

    2009ம் ஆண்டுக்கான விருதுகள்

    2009ம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான முதல் பரிசு பசங்க படத்துக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசு மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கும் 3வது பரிசு அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது மலையன் படத்துக்காக நடிகர் கரணுக்கும் சிறந்த நடிகை விருது பொக்கிஷம் படத்துக்காக நடிகை பத்மப்பிரியாவுக்கும் வழங்கப்படுகிறது. அங்காடித் தெரு படத்தை இயக்கிய வசந்த பாலனுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் (வில்லன்).

    2010ம் ஆண்டுக்கான விருதுகள்

    2010ம் ஆண்டுக்கான விருதுகள்

    2010ம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான முதல் பரிசு மைனா படத்துக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசு களவாணி படத்துக்கும் 3வது பரிசு புத்ரன் படத்துக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது ராவணன் படத்துக்காக நடிகர் விக்ரமுக்கும் சிறந்த நடிகை விருது மைனா படத்துக்காக நடிகை அமலா பாலுக்கும் வழங்கப்படுகிறது. மைனா படத்தை இயக்கிய பிரபு சாலமனுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த வில்லன் நடிகர் எஸ். திருமுருகன் (களவாணி).

    2011ம் ஆண்டுக்கான விருதுகள்

    2011ம் ஆண்டுக்கான விருதுகள்

    2011ம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான முதல் பரிசு வாகை சூடவா படத்துக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசு தெய்வத்திருமகள் படத்துக்கும் 3வது பரிசு உச்சி முகர்ந்தால் படத்துக்கும் சிறப்பு பரிசு மெரினா படத்துக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது வாகை சூடவா படத்துக்காக நடிகர் விக்ரமுக்கும் சிறந்த நடிகை விருது நடிகை விருது இனியாவுக்கும் வழங்கப்படுகிறது. சிறப்பு பரிசு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்படுகிறது. தெய்வத்திருமகள் படத்தை இயக்கிய ஏ.எல். விஜய்க்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த வில்லன் நடிகர் பொன்வண்ணன் (வாகை சூடவா).

    2012ம் ஆண்டுக்கான விருதுகள்

    2012ம் ஆண்டுக்கான விருதுகள்

    2012ம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான முதல் பரிசு வழக்கு எண் 18/9 படத்துக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசு சாட்டை படத்துக்கும் 3வது பரிசு தோனி படத்துக்கும் சிறப்பு பரிசு கும்கி படத்துக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது நீதானே என் பொன்வசந்தம் படத்துக்காக நடிகர் ஜீவாவுக்கும் சிறந்த நடிகை விருது கும்கி படத்துக்காக நடிகை லக்‌ஷ்மி மேனனுக்கும் வழங்கப்படுகிறது. சிறப்பு பரிசு நடிகர் விக்ரம் பிரபுவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் வழங்கப்படுகிறது. வழக்கு எண் 18/9 படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த வில்லன் நடிகர் விஜய்சேதுபதி (சுந்தரபாண்டியன்).

    2013ம் ஆண்டுக்கான விருதுகள்

    2013ம் ஆண்டுக்கான விருதுகள்

    2013ம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான முதல் பரிசு ராமனுஜன் படத்துக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசு தங்கமீன்கள் படத்துக்கும் 3வது பரிசு பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கும் சிறப்பு பரிசு ஆள் படத்துக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது ராஜா ராணி படத்துக்காக நடிகர் ஆர்யாவுக்கும் சிறந்த நடிகை விருது நடிகை நயன்தாராவுக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குநர் ராம் (தங்க மீன்கள்), சிறந்த வில்லன் நடிகர் விடியல் ராஜு (ஆள்).

    2014ம் ஆண்டுக்கான விருதுகள்

    2014ம் ஆண்டுக்கான விருதுகள்

    2014ம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான முதல் பரிசு குற்றம் கடிதல் படத்துக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசு கோலிசோடா படத்துக்கும் 3வது பரிசு நிமிர்ந்து நில் படத்துக்கும் சிறப்பு பரிசு காக்கா முட்டை படத்துக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது காவியத் தலைவன் படத்துக்காக நடிகர் சித்தார்த்துக்கும் சிறந்த நடிகை விருது காக்கா முட்டை படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குநர் ராகவன் (மஞ்சப்பை), சிறந்த வில்லன் நடிகர் பிரித்திவ்ராஜ் (காவியத் தலைவன்).

    English summary
    Tamil Nadu State Award for Tamil Cinema Complete list for 2009 to 2014 is here. Popular actors like Arya, Vijay Sethupathi, Sivakarthikeyan, Jeeva and Actress like Nayanthara, Samantha and Amala Paul receives awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X