twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சனி, ஞாயிறுகளிலும் வெறிச்சோடிய தியேட்டர்கள்...!

    By Shankar
    |

    ஜிஎஸ்டி வரியை நேர்மையாக அமல்படுத்தாமல் மக்கள் மீது திணித்ததால் வார இறுதி நாட்களில் கூட கூட்டம் வராததால் தமிழகம் முழுவதிலும் தியேட்டர்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

    ரூ.100-க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் இதற்கு முன்பு டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக ரூ.120 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் ரூ.153 ஆக உயர்ந்தது. மேலும் சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது 30 - 40 சதவீதம் கூடுதலாகிறது. இதனால் டிக்கெட் கட்டணம் ரூ.200-ஐத் தொடுகிறது. இதன் காரணமாக தியேட்டரில் சினிமா பார்க்க வருபவர்களின் கூட்டம் குறைந்துவிட்டது.

    Tamil Nadu theaters look empty in weekends

    வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா தியேட்டர்கள் நிரம்பி வழியும். ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை. பார்க்கிங் ஏரியாக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

    4 பேர் கொண்ட குடும்பத்தினர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது ரூ 3000 வரை செலவாகிவிடுகிறது. எனவே தியேட்டர் பக்கம் செல்லவே குடும்பத்தினர் அஞ்சும் நிலை உள்ளது. இதனால்தான் சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

    இந்த வாரம் வெளியான அத்தனைப் படங்களுமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

    English summary
    Due heavy ticket price after GST, most of the theaters look empty without enough crowd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X