twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒடிடியில் வெளியான படங்களை இனி திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் - திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு!

    |

    சென்னை : கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்தே ஓடிடி குறித்த விவாதம் தமிழ் சினிமாவில் ஓயாமல் இருந்து வருகிறது.

    சில பல சலசலப்புகளைத் தாண்டி, ஓடிடி தளங்களில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக மாறியது.

    அங்கே போயா செல்ஃபி எடுப்பாங்க… ஷிவானியின் போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள் !அங்கே போயா செல்ஃபி எடுப்பாங்க… ஷிவானியின் போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள் !

    தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ஓடிடியில் வெளியான படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது என புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    ஏராளமான ஓடிடி தளங்கள்

    ஏராளமான ஓடிடி தளங்கள்

    அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஓடிடி, யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது தமிழ் சினிமாவிற்கு புதியதல்ல. 2016 ம் ஆண்டு முதல் கர்மா , சில சமயங்களில் , சிகை , களவு , ஆர். கே. நகர் போன்ற படங்கள் தியேட்டருக்கு செல்லாமல் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. விஸ்வரூபம் பட ரிலீசுக்கு எதிர்ப்பு எழுந்த போது கூட டிஜிட்டல் தளத்தில் வெளியிடுவது பற்றி கமல் பேசி இருந்தார்.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    கொரோனா முதல் அலையின்போது போடப்பட்ட ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. கோடி கோடியாக பணத்தை கொட்டி எடுக்கப்பட்ட படங்கள் பெட்டிகளில் முடங்கி கிடந்தன. இதனால், பெரும் நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது தமிழ் சினிமா. நஷ்டத்தை சமாளிக்க மாற்று வழியாகத்தான் ஓடிடி தளங்களின் பக்கம் கவனத்தை திருப்பினர் தமிழ் சினிமாத் துறையினர். இருப்பினும், ஓடிடித்தளங்களை பட தயாரிப்பாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

    ஓடிடி அசுர வளர்ச்சி

    ஓடிடி அசுர வளர்ச்சி

    இத்தகைய எதிர்ப்புகளை மீறி தமிழ் சினிமாவில் ஓடிடித்தளம் இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அசுர வளர்ச்சி அடைந்தது என்று தான் கூற வேண்டும். சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி வந்த நேரத்தில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது இதற்கு மிகக்பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியது.

    பெரிய நடிகர்களின் படங்கள்

    பெரிய நடிகர்களின் படங்கள்

    விஜய் சேதுதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்த காபெ ரணசிங்கம், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின்,நயன்தாராவின் மூக்கத்தி அம்மன், சூரரைப்போற்று என பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒடிடி தளத்தில் வெளியாகின.

    தமிழுக்கு தனி ஓடிடி தளம்

    தமிழுக்கு தனி ஓடிடி தளம்

    அண்மையில், மலையாள படங்களை வெளியிடுவதற்காக பிரத்யேக ஓடிடி தளம் ஆரம்பிக்கப்போவதாக கேரள அரசு அறிவித்த உடனே, தமிழ் மொழிக்கும் தனி ஓடிடி தளத்தை ஏற்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கோரிக்கையை எழுப்பினார் இயக்குநர் சேரன். இந்தக் கோரிக்கையை தமிழ் சினிமாவில் இருக்கும் பலரும் ஆதரிக்க தொடங்கினர்.

    புதிய விதிமுறைகள்

    புதிய விதிமுறைகள்

    இந்நிலையில் தற்போது புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ஓடிடியில் வெளியான படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது என தெரிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஓடிடி விற்பனைக்கான படங்களின் Preview காட்சிககும் திரையரங்குகள் வழங்கப்படாது என்றும், ஒடிடிக்கு என்று தனியாக படங்களைத் தயாரித்துக் கொள்ளலாம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    ரசிகர்கள் கவலை

    ரசிகர்கள் கவலை

    தமிழகத்தில் கொரோனாவின் 2வத அலை தீவிரமானதை அடுத்து, கடந்த சில மாதங்களாக பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின. ஓடிடியில் வெளியாக பலத்திரைப்படங்கள் வரிசையில் நிற்கின்றன. ஓடிடியில் வெளியாகி வெற்றிப்பெற்றத் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

      English summary
      Tamil Nadu Theatre owners association says, ott released movies will not release in theatres, and OTT films not screen in theaters,
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X