தமிழ்ப் புத்தாண்டு: ரஜினி, கமல், காப்பான், மிஸ்டர் லோக்கல் வாழ்த்து
சென்னை: ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நல்லாத் தான், ஞாயிற்றுக்கிழமையா புத்தாண்டு வரணும். வார நாட்களில் வந்திருக்கக் கூடாதா என்ற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த்
தர்பார் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ரஜினி தமிழ்ப் மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கமல் ஹாஸன்
இனிய தமிழ்ப் புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்தும் உங்கள் நான் என்று கமல் ஹாஸன் வாழ்த்தியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான்
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்தியுள்ளார்.
சூர்யா
காப்பான் சூர்யா அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்
மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் தமிழ் மக்களை இந்த நல்ல நாளில் வாழ்த்தியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய அழகான புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











