twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    70 ஆயிரத்தை தாண்டிய ட்வீட்கள்.. அமேசானுக்கே ஆட்டம் காட்டும் தமிழர்கள்.. #BoycottAmazon

    |

    சென்னை: தமிழர்களின் உணர்வுகளை தொட்டால் என்ன நடக்கும் என்பதை காட்ட வேண்டும் என்கிற முடிவில் ஏகப்பட்ட தமிழர்களும் தமிழ் உணர்வாளர்களும் அமேசான் பிரைம் அக்கவுண்ட்டையே அன்சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர்.

    மேலும், ஈழ தமிழர்களின் சுதந்திர போரையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் தி ஃபேமிலி மேன் 2 தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கண்டனக் குரல்களை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

    5 ஆண்டு கொண்டாட்டத்தில் இறைவி படம் நினைவுகூர்ந்த கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி5 ஆண்டு கொண்டாட்டத்தில் இறைவி படம் நினைவுகூர்ந்த கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி

    #BoycottAmazon ஹாஷ்டேக்கில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்கள் குவிந்து அமேசான் பிரைமுக்கு கடும் நெருக்கடி நிலையை உருவாக்கி உள்ளது.

    அமேசானே இருக்காது

    அமேசானே இருக்காது

    தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை வெளியிட்ட அமேசான் பிரைமின் அனைத்து விதமான தொடர்புகளையும் ஒட்டுமொத்த தமிழர்களும் துண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி தனது வலுவான கண்டனத்தை பதிவு செய்தார்.

    அமேசானுக்கு தடை

    அமேசானுக்கு தடை

    சீமான், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த வெப் தொடருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது #BoycottAmazon என்ற ஹாஷ்டேக்கை 70 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்களை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    கேன்சல் பண்ணிட்டேன்

    கேன்சல் பண்ணிட்டேன்

    அமேசான் பிரைமில் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை வெளியிடக் கூடாது என கண்டனங்கள் எழுந்ததை மீறியும் அந்த வெப் தொடரை கடந்த ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைம் வெளியிட்டது. சந்தேகித்ததை போலவே அந்த வெப் தொடரில் சர்ச்சைகுரிய பல காட்சிகள் இடம்பெற்ற நிலையில் பலரும் தற்போது அமேசான் தொடர்பையே துண்டித்து வருகின்றனர்.

    வாங்க மாட்டேன்

    வாங்க மாட்டேன்

    அடுத்த வாரம் 30 ஆயிரம் மதிப்பிலான டிவி ஒன்றை அமேசானில் வாங்க இருந்தேன். ஆனால், தி ஃபேமிலி மேன் 2 தொடர் எங்கள் இன உணர்வுகளை காயப்படுத்தியதை தொடர்ந்து அமேசானை அன் இன்ஸ்டால் செய்து விட்டேன். இனிமேல் அமேசான் நிறுவனத்தில் எதையும் வாங்க போவதில்லை என இவரை போல ஏகப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    இந்த ஹாஷ்டேக் தற்போது இந்தியா அளவில் டிரெண்டாகி வருகிறது. விரைவில் உலக அளவில் இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளனர். அமேசான் ஆப்களை அன் இன்ஸ்டால் செய்வதாகவும், அமேசானை தமிழ்நாட்டில் இருந்தே துரத்தி அடிக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

    ஆபாச சித்தரிப்பு

    ஆபாச சித்தரிப்பு

    ராஜி என ஈழப் பெண்ணாக இந்த வெப் தொடரில் சமந்தா நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் எல்லாமே விடுதலை புலிகளை சேர்ந்த பெண் போராளிகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும், படுக்கையை சர்வ சாதாரணமாக பகிர்ந்து கொள்வார்கள் என்றும் ஆபாசமாக சித்தரித்துள்ளனர் இதில் நடித்த சமந்தாவையும் தடை செய்ய வேண்டும் என கண்டனங்கள் எழுந்துள்ளன.

    English summary
    Tamil people trending #BoycottAmazon for streaming The Family Man 2 which contains many misrepresentation about Tamil Eelam issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X