கூகுளில் தெலுங்கு, கன்னட பவர்ஸ்டார்களை முந்திய தமிழ் பவர் ஸ்டார்

By Siva

சென்னை: கூகுளில் கோலிவுட் பவர் ஸ்டார் சீனிவாசன் டோலிவுட் மற்றும் சாண்டல்வுட் பவர் ஸ்டார்களை முந்திவிட்டார்.

டாக்டர் சீனிவாசனுக்கு திடீர் என்று நடிக்க ஆசை வந்து லத்திகா என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தை ஓட வைக்க தானே ஒரு தியேட்டரை ஒரு வருடத்திற்கு வாடகைக்கு எடுத்து ஓட்டினார். படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பிரியாணி கொடுத்தார். மேலும் படத்தின் பாதி டிக்கெட்டை கொண்டு வருபவர்களுக்கு சென்னையில் உள்ள தனது மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் அளித்தார்.

தனக்கு தானே பவர் ஸ்டார் என்று பெயர் வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் பப்ளிசிட்டி தேடினார். இந்த நிலையில் தான் சந்தானத்துடன் சேர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார். அந்த படத்தில் சந்தானம் பவரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி எடுத்தார். விளைவு இன்று பவர் கை நிறைய படங்கள் பிளஸ் புகழ்.

சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது இந்த பவர்ஸ்டார்

சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது இந்த பவர்ஸ்டார்

அண்மையில் பேட்டியளித்த பவர், சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று கூறினார். இதை கேட்டு ரஜினியின் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.

விஜய் எனக்கு இளைய தம்பி

விஜய் எனக்கு இளைய தம்பி

இளைய தளபதி விஜய் தனக்கு இளைய தம்பி என்று பவர் ஸ்டார் தெரிவித்தார். இதனால் விஜய் ரசிகர்கள் பலர் பவர் மேல் கடுப்பில் உள்ளனர்.

கூகுளில் தெலுங்கு, கன்னட பவர் ஸ்டார்களை முந்திய தமிழ் பவர்

கூகுளில் தெலுங்கு, கன்னட பவர் ஸ்டார்களை முந்திய தமிழ் பவர்

கூகுள் இணையதளத்தில் முன்பெல்லாம் பவர் ஸ்டார் என்று ஆங்கிலத்தில் கொடுத்தால் தெலுங்கு பவர் ஸ்டாரான பவன் கல்யாண் அல்லது கன்னட பவர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் குறித்த தகவல்கள் வரும். ஆனால் தற்போது பவர் ஸ்டார் என்று கொடுத்தால் சீனிவாசன் பற்றிய தகவல்கள் மட்டுமே அந்த பக்கம் முழுவதும் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X