twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது’..வெற்றி மாறனுக்கு ஆதரவாக களத்தில் குதித்த கருணாஸ்..வலுக்கும் மோதல்

    |

    'தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது' என இயக்குநர் வெற்றிமாறனுக்கு அதரவாக நடிகர் கருணாஸ் களத்தில் குதித்துள்ளார்.

    பொன்னியின் செல்வன் சோழ மன்னன் விவகாரத்தில் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என திரையுலகினர் கருத்து தெரிவித்து வரும் வேளையில் கருணாஸ் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் தற்போது மோதல் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது.

    தளபதி 67க்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்த சிம்பு பட இயக்குநர்… எல்லாம் விஜய்க்காக மட்டும் தானாம்!தளபதி 67க்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்த சிம்பு பட இயக்குநர்… எல்லாம் விஜய்க்காக மட்டும் தானாம்!

     பொன்னியின் செல்வன் வந்தாலும் வந்தது சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை

    பொன்னியின் செல்வன் வந்தாலும் வந்தது சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை

    சமூக வலைதளங்களில் ஒருவர் ஒரு கருத்தை பதிவிட்டுவிட்டு சென்றுவிடுவார். ஆனால் அதற்கு கீழே நெட்டிசன்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். அப்படித்தான் இருக்கிறது பொன்னியின் செல்வன் பட விவகாரமும். படத்தை எடுத்தவர்கள் திரையிட்டு வசூலை வாரி குவிக்கின்றனர். ஆனால் தினமும் பொன்னியின் செல்வனை பேசவைக்கும் விதமாக சினிமா பிரபலங்கள் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர். இதனால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கிறது.

     சோழமன்னர்களை இந்து மன்னர்களாக சித்தரிக்கிறார்கள்- வெற்றிமாறன்

    சோழமன்னர்களை இந்து மன்னர்களாக சித்தரிக்கிறார்கள்- வெற்றிமாறன்

    பொன்னியின் செல்வன் படத்தில் சோழ மன்னர்கள் இந்து மன்னர்களாக சித்தரிக்கிறார்கள், திராவிட இயக்கங்கள் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததால் சினிமா பிழைத்தது என்று கூறியிருந்தார், இதை எச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்றோர் எதிர்த்து கருத்து தெரிவிக்க, சீமான் வெற்றி மாறனுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க, பேரரசு எதிர்க்க திரை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகியும், நடிகருமான கருணாஸ் வெற்றி மாறனுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார்.

     வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதுபோல் உள்ளது- கருணாஸ்

    வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதுபோல் உள்ளது- கருணாஸ்

    அவரது அறிக்கையில், "விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், "கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்." என்று பேசினார்.

     வெற்றிமாறன் கருத்து மிக மிக உண்மை- கருணாஸ்

    வெற்றிமாறன் கருத்து மிக மிக உண்மை- கருணாஸ்

    இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது. இராஜ ராஜசோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது. இராஜராஜச்சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை! அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் இங்கே உருவாகிறது.

     ராஜராஜன் சிவனை வழிப்பட்ட வைணவர் - கருணாஸ்

    ராஜராஜன் சிவனை வழிப்பட்ட வைணவர் - கருணாஸ்

    அந்தக் காலத்தில் இந்துமதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் என பல மதங்கள்.. இராஜராஜன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு! ஆனால் இராஜராச்சோழனை, இராஜேந்திரசோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்லுவது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது. காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் தமது தெய்வக்குரல் நூலில். "நாம் சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று நம்மை ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம் என்றார்" அந்தப் "பிழைத்துக் கொண்டோம்" என்ற வார்த்தையிலிருந்துதான் இன்று அவரை அனைத்தையும் தனதாக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

     முருகக்கடவுள் சுப்ரமணியனாக மாற்றம்- கருணாஸ்

    முருகக்கடவுள் சுப்ரமணியனாக மாற்றம்- கருணாஸ்

    ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும் அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்., அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது. இராஜராஜச் சோழனை இந்து என்று மாற்ற நினைப்பது, மட்டுமா நடந்தது? தமிழை சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்துவெளிநாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை குதிரையாக திரித்தார்கள், முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள்.

     வெற்றி மாறன் சொன்னது சரியே- கருணாஸ்

    வெற்றி மாறன் சொன்னது சரியே- கருணாஸ்

    முப்பால் யாத்த வள்ளுவப் பெருந்தகைக்கு காவியும் பூணூலும் அணிவித்தார்கள். தஞ்சைப் பெரியகோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம்.. எதையெல்லாம் காவியாக்க முடியுமே அதையெல்லாம் மாற்றமுற்படுவார்கள். கடைசியில் அது கலைத்துறைக்கும் வரும்; வந்துகொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை தற்காப்பு உணர்ச்சியை ஊட்டும் உரையாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அது மிகச்சரியானது. நாம் இனியாவது விழிப்புணர்வை அடையவேண்டும்.

     மீண்டும் முற்றும் மோதல்

    மீண்டும் முற்றும் மோதல்

    ஆகவே நாம் விழிப்புணர்வு பெறவேண்டும். கலை மக்களுக்கானது! கலைப்பண்பாட்டு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரியது அதை மாற்ற நினைப்பதும், அதை தனதாக்கிக் கொள்ள நினைப்பதும் மானுட அறத்திற்கே எதிரானது. தமிழர் அடையாளங்களை பறிக்க நினைத்தால் தமிழர் இனம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம். இவ்வாறு கருணாஸ் வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    English summary
    Actor Karunas has jumped into the fray of director Vetrimaran saying that 'Tamils ​​will not be happy if Tamil identities are taken away'. Karunas' comment has created a sensation while the film fraternity is expressing support and opposition to Vetermaran's opinion on Ponniyin Selvan Chola Mannan's issue. As a result, the conflict has now moved towards the next stage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X