சூர்யா ரசிகர்கள் பயந்தது நடந்துவிட்டது: என்.ஜி.கே.வை கதறவிட்ட தமிழ் ராக்கர்ஸ்
Recommended Video
சென்னை: என்.ஜி.கே. படம் ரிலீஸான கையோடு அதை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் இன்று ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் முதல் பாதி ஓகே ஆனால் இரண்டாம் பாதி கொடூர மொக்கை என்று தெரிவித்துள்ளனர்.

தெலுங்கில் என்.ஜி.கே. படத்தை பார்த்தவர்களோ கதை புரியாமல் காதல் படத்தில் வந்த பரத் நை, நை, நை என்று சொல்வது போன்று வெளியே வந்துள்ளனர். கடைசி வரைக்கும் கதை என்னவென்றே செல்வராகவன் சொல்லவில்லையே என்று புலம்பியுள்ளனர்.
தமிழ் ரசிகர்களோ இரண்டாம் பாதி எப்பொழுது முடியும், தியேட்டரை விட்டு எப்பொழுது வெளியேறலாம் என்று காத்திருந்துள்ளனர். அதை இப்படி வீடியோ வெளியிட்டு கலாய்த்துள்ளனர்.
சூர்யா தனது நடிப்பால் எவ்வளவோ முட்டுக் கொடுத்தும் படத்தை காப்பாற்ற முடியவில்லை. இங்கு ஆபரேஷன் ஃபெயிலியர், பேஷன்ட் கோமாவில் இருந்தார். இந்நிலையில் என்.ஜி.கே. படம் வெளியான சில மணிநேரத்திலேயே அதை ஆன்லைனில் கசியவிட்டு நந்த கோபாலன் குமரனை குழிதோண்டி புதைத்துவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

ஏற்கனவே படத்தை பார்த்து சிலர் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள், இந்த தமிழ் ராக்கர்ஸ்காரன் வேறு என்ன செய்யப் போகிறானோ என்று சூர்யா ரசிகர்கள் பயந்தது போன்றே நடந்துவிட்டது. என்.ஜி.கே. விமர்சனங்களை பார்த்துவிட்டு தியேட்டருக்கு போக வேண்டாம் என்று முடிவு செய்தவர்கள் அதை தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்துவிட்டனர்.

என்.ஜி.கே. படம் சூர்யாவின் கெரியரிலேயே மறக்க முடியாத தோல்விப் படமாக அமையும் என்று பேசத் துவங்கிவிட்டார்கள். பாவம், அவரும் எவ்வளவோ சிறப்பாக நடித்தும் படத்தை காப்பாற்ற முடியவில்லை. சில இடங்களில் சூர்யாவின் நடிப்பே செயற்கையாக இருந்ததாக கூறுகிறார்கள் விமர்சகர்கள்.
இயக்குநர் செல்வராகவன் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நடித்தேன். அவர் வசனங்களை முன்கூட்டியே மனப்பாடம் செய்யவிட மாட்டார். செல்வராகவன் நடிகர்களிடம் வேலை வாங்கும் விதமே தனி என்றார் சூர்யா. எல்லாம் சரி, ஆனால் படம் தியேட்டருக்கு செல்பவர்களை கவரத் தவறிவிட்டதே.
செல்வராகவனின் அக்மார்க் காட்சிகள் என்.ஜி.கே. படத்தில் மிஸ்ஸிங். படத்தை பார்க்கும்போது உண்மையிலேயே இந்த படத்தின் இயக்குநர் செல்வராகவன் தானா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications











