எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது: அருண் விஜய்
Recommended Video

நாகர்கோவில்: எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.
அருண் விஜய் நடித்து வெளியான தடம் படம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ராஜாஸ் மால் திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இதனிடையே படம் மக்கள் மத்தியில் எந்த அளவில் பிரபலம் அடைந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும், படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அருண் விஜய், நடிகை தன்யா கோப், இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் தமிழகம் முழுவதும் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் வந்த அவர்கள் ராஜாஸ் மால் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய் கூறியதாவது,

தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களை முடக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். வரும் காலத்தில் அது போன்ற சட்டங்கள் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்கள் தான் சிந்தித்து திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை காண வேண்டும். எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது. தமிழ் சினிமா நிலைத்து நிற்கும்.

எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வாழ்த்தி வரவேற்கிறேன். அரசியலில் கவனம் தேவை, நடிகர்கள் அரசியலுக்கு வருவது அரசியலில் ஆரோக்கியமானது என்றார்.


Click it and Unblock the Notifications











