»   »  விஷாலுக்கு ஏழரையை கூட்டும் தமிழ் ராக்கர்ஸ் செய்த 'அன்பான வேலை'யை பார்த்தீர்களா?

விஷாலுக்கு ஏழரையை கூட்டும் தமிழ் ராக்கர்ஸ் செய்த 'அன்பான வேலை'யை பார்த்தீர்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் ராக்கர்ஸ் இவ்ளோ நல்லவர்களா..? அதிர்ந்த விஷால்- வீடியோ

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் செய்துள்ள ஒரு காரியம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

புதுமுகம் அப்பாஸ் அக்பர் இயக்கிய சென்னை2சிங்கப்பூர் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிவிட்டது.

இதை பார்த்த இயக்குனர் அப்பாஸ் மாத்தி யோசித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தமிழ் கன்

தமிழ் கன்

என் படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுவிட்டார்களே என்று ஒரு ஓரமாக உட்கார்ந்து கவலைப்படாமல் மாத்தி யோசித்தார் அப்பாஸ். தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட பைரசி இணையதளங்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டார்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

என் படத்தை ஒரு 30 நாட்களுக்கு உங்கள் சைட்டில் இருந்து நீக்கிவிடுங்கள், 31வது நாள் மீண்டும் அப்லோடு செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தார் அப்பாஸ் அக்பர்.

இந்த ஆளு

இந்த ஆளு

அப்பாஸ் அக்பரின் வீடியோவை பார்த்தவர்கள் அவருக்காக பரிதாபப்பட்டாலும் இந்த ஆளு என்ன லூஸா தமிழ் ராக்கர்ஸிடம் போய் கருணையை எதிர்பார்க்கிறாரே என்று சிரித்தார்கள்.

நீக்கம்

நீக்கம்

அப்பாஸ் அக்பரின் கோரிக்கை தமிழ் ராக்கர்ஸ் காதில் விழுந்துவிட்டது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இருந்து சென்னை2சிங்கப்பூர் படத்தை நீக்கிவிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Rockers has removed Chennai2Singapore movie from their site after director Abbas Akbar has requested them to do so. Debutant Abbas Akbar's Chennai2Singapore has got good response from the movie lovers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X