பிகில்… காலை 5 மணிக்கு ஸ்பெஷல் ஷோ - 9 மணிக்கு தமிழ் ராக்கர்ஸ் ஷோ

Recommended Video

Bigil movie review | பிகில் படம் எப்படி இருக்கு ?

சென்னை: தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் எந்த திரைப்படங்களையும் திருட்டுத்தனமாக எந்த இணையதளமும் வெளியிடக்கூடாது என்ற உயர் நீதி மன்றத்தின் உத்தரவையும் மீறி பிகில் திரைப்படம் ஆன்லைனில் வெளியானது திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேட்டை நாய் கூட கொஞ்சம் தாமதமாகத் தான் தன்னுடைய இரையை கவ்விப் பிடிக்க பாய்ந்தோடும். ஆனால், புதுப்படங்களை திருட்டுத்தனமாக படம் பிடித்து, உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பிற திருட்டுக் கும்பலும், வேட்டை நாயை விட மோசமாக கொடூரமாக, அதே சமயத்தில் மிக வேகமாக வேலை செய்கின்றன.

Tamil Rockers has released Bigil movie

ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் தொடங்கி, வெளியிடுவது வரை எத்தனை சிரமங்கள் உள்ளன என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், இவை அனைத்தையும் நன்கு தெரிந்துகொண்டே, புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடுவது என்பது வேதனை தான்.

ஒருவனுடைய உழைப்பின் பயனை அவனுக்கு தெரியாமல் திருடுவது எவ்வளவு வேதனையானது என்பது, பாதிக்கப்படும் உழைப்பாளிக்கு தான் தெரியும். ஒருவேளை அவர்களும் கஷ்டப்பட்டு உழைத்தால் தான், அவர்களும் பாதிக்கப்படும்போது அதன் வலி புரிய ஆரம்பிக்கும்.

தீபாவளிக்கு பயங்கர எதிர்பார்ப்புடன் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் இளைய தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரசிகர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. காலை 4 மணிக்கே முதல் ஷோ பார்க்க ரசிகர் கூட்டம் அனைத்து திரையரங்குகளில் அலைமோதியது.

அட்லீ இயக்கத்தில், விஜய் மூன்று வேடங்களில் படு மாஸ்ஸாக நடித்த இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடிவந்த நிலையில் தற்போது பிகில் திரைப்படம் திரையரங்கில் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி படக்குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரைப்படங்கள் வெளியானவுடன் குறிப்பாக பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிடும் இணையதளங்கள் முடக்கப்பட வேண்டும் என்று பல புகார்களை மீறியும் தீபாவளி ரிலீஸ் படங்கள் இணையதளத்தில் வெளியானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தீபாவளிக்கு வெளியாகும் கைதி மற்றும் பிகில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக எந்த இணையதளமும் வெளியிடக்கூடாது என்ற உயர் நீதி மன்றத்தின் உத்தரவையும் மீறி பிகில் திரைப்படம் ஆன்லைனில் வெளியானது திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X