அதிரடி குத்து நம்பர்… தன்னுடைய இசையில் முதல் பாடலை வெளியிட்ட பிரேம்ஜி

சென்னை : நடிகர் பிரேம்ஜி நடிப்பு மற்றும் இசையில் உருவாகிவரும் படம் தமிழ் ராக்கர்ஸ்.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் தற்போது படத்தின் முதல் லிரிக் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி ஹீரோவாக நடித்துவரும் படம் தமிழ் ராக்கர்ஸ். ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் கே பிச்சாண்டி தயாரித்துவரும் இந்தப் படத்தை பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

சிறப்பான கவனம்

சிறப்பான கவனம்

தான் நடிக்கும் படத்தில் தன்னுடைய கடி ஜோக்குகள் மற்றும் டயலாக்குகள் மூலம் சிறப்பான கவனத்தை ஈர்ப்பவர் பிரேம்ஜி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து காமெடி களத்தில் பயணித்து வருகிறார்.

இசையில் கவனம்

இசையில் கவனம்

இந்நிலையில் இசையமைப்பாளராகவும் தன்னை நிரூபித்து வருகிறார். இவரது தமிழ் ராக்கர்ஸ் படத்தில் இவர் இசையமைத்து வரும் நிலையில் படத்தின் லிரிக் வீடியோ பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். குத்து நம்பராக இந்த பாடல் வெளியாகியுள்ளது.

லிரிக் வீடியோ பாடல்

எக்கச்சக்கம் ஆகுதே என தொடங்கும் அந்தப் பாடலில் பிரேம்ஜியுடன் மீனாட்சி தீக்ஷித் ஆடியுள்ளார். பாடலின் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார். ஸ்வாகதா கிருஷ்ணன், ஹேமா அம்பிகாவுடன் இணைந்து இந்தப் பாடலை பிரேம்ஜி அமரனும் பாடியுள்ளார். பாடலை பிரேம்ஜியின் அண்ணனும் பிரபல இயக்குநருமான வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பரபரப்பான பர்ஸ்ட் லுக்

பரபரப்பான பர்ஸ்ட் லுக்

தமிழ் ராக்கர்ஸ் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வாயில் சிகரெட், கையில் சரக்கு பாட்டிலுடன் பிரேம்ஜி இருக்கும்படியாக வெளியான இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.

இசையமைப்பில் ஆர்வம்

இசையமைப்பில் ஆர்வம்

படத்தில் பிரேம்ஜியுடன் எஸ்பிபி சரண், விடிவி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்ஷி தீக்ஷித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முறையான இசை பயிற்சியுடன் காணப்படும் பிரேம்ஜி தனக்கு இசையமைப்பதில் தான் அதிக ஆர்வம் என்பதை பலமுறை தெரிவித்திருக்கிறார்.

Recommended Video

Maanadu மாஸ்! தெறிக்க விடுகிறார்..Simbu..ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil Filmibeat
தமிழ் ராக்கர்ஸ் படத்திற்கு இசை

தமிழ் ராக்கர்ஸ் படத்திற்கு இசை

இந்நிலையில் தற்போது இந்தப் படத்திற்கு அவர் இசையமைத்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தின் இசை இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தரும் என நம்பலாம். இதையடுத்து தொடர்ந்து இசையமைப்பிலும் ஒரு வலம் வருவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X