ரிலீஸான அன்றே இணையதளத்தில் கசிந்த செக்கச் சிவந்த வானம்: உங்க சவால் என்னாச்சு விஷால்? #CCV
Recommended Video

சென்னை: செக்கச் சிவந்த வானம் படம் ரிலீஸான அன்றே இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த செக்கச் சிவந்த வானம் படம் நேற்று ரிலீஸானது.
படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுதியதாக விமர்சனம் எழுந்துள்ளது.

செக்கச் சிவந்த வானம்
செக்கச் சிவந்த வானம் படம் ரிலீஸான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிட்டது. இதை பார்த்து படக்குழு பேரதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த இணையதளத்தில் இருந்து பலரும் படத்தை டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ள போதிலும் தமிழ் ராக்கர்ஸால் படக்குழு கவலை அடைந்துள்ளது.

புதுப் படங்கள்
புதுப்படங்களை ரிலீஸான அன்றே தங்கள் இணையதளத்தில் வெளியிடுவதை ஒரு வழக்கமாவே வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். மக்களும் சொகுசாக அதை டவுன்லோடு செய்து பார்க்கிறார்கள். படம் ரிலீஸான அன்று அதை பார்க்க டிக்கெட் புக் பண்ணும் ஆர்வம் எந்த அளவுக்கு உள்ளதோ அதே ஆர்வம் தமிழ் ராக்கர்ஸில் பார்க்கவும் உள்ளது.

திருட்டுத்தனம்
இப்படி திருட்டுத்தனமாக இணையதளத்தில் படம் பார்ப்பது தப்பு இல்லையா என்று கேட்டால் தியேட்டர்களில் கொள்ளை காசு கேட்கிறார்கள். அதனால் இப்படி பார்ப்பது தவறு இல்லை என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. பார்க்க ஆட்கள் இருக்கும் தைரியத்தில் அவர்களும் படத்தை இணையதளத்தில் வெளியிடுகிறார்கள்.

விஷால்
புதுப்படத்தை பலரும் இணையதளத்தில் பார்ப்பது கஷ்டப்பட்டு உழைத்த படக்குழுவுக்கு தான் நஷ்டம். தமிழ் ராக்கர்ஸை பிடித்துக் காட்டுகிறேன் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சவால் விட்டார். ஆனால் இன்னும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் விஷால் துரிதமாக செயல்பட்டால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











