வெளியான சில மணி நேரங்களில் ஜடாவை ஆன்லைனில் ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்! அதிர்ச்சியில் படக்குழு!
Recommended Video
சென்னை: ஜடா படம் வெளியான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் அதனை இணையதளத்தில் வெளியிட்ட சம்பவம் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நடிகர் கதிர் நடித்துள்ள படம் ஜடா. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான குமரன் இயக்கியிருக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இப்படம் இதில் கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஆன்லைனில் ரிலீஸ்
இந்தப்படம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்துள்ளனர்.

படக்குழு அதிர்ச்சி
இதனால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் எடுத்து முடித்து திரையில் வெளியிடுவதற்குள் படக்குழுவும் தயாரிப்பாளர் தரப்பும் படாதபாடு பட்டு விடுகிறது.

திருடி ஆன்லைனில்
ஆனால் எந்த வலியுமே இல்லாமால் ஆன்லைன் பைரேட்ஸ் படங்களை தியேட்டரில் ஒரு நாள் கூட ஓட விடாமல் திருடி ஆன்லைனில் ரிலீஸ் செய்து விடுகின்றனர்.

தனி இடம்
நடிகர் கதிர் ஏற்கனவே தனது படங்களுக்கு என ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு ஆகிய படங்களிலும் அதனை நிரூபித்திருக்கிறார்.

சிறைத்தண்டனை
திரைப்படங்களை திருடி இதுபோன்று ஆன்லைனில் வெளியிடும் நபர்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் 10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதித்துள்ள போதும் இதுபோன்ற திருட்டை தடுக்க முடியவில்லை.

தொடரும் பட்டியல்
கடந்த வாரம் ஹோட்டல் மும்பை, என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் கமாண்டோ 3 ஆகிய படங்கள் ஆன்லைனில் லீக்கானது. அதனை தொடர்ந்து தற்போது ஜடா திரைப்படமும் ஆன்லைனில் ரிலீஸ் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications











