ஹெச்டி குவாலிட்டி.. அமேஸான் தரத்தில் முன்கூட்டியே தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்!

சென்னை: பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேஸான் ப்ரைமில் வெளியாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் ஹெச்டி குவாலிட்டியில் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகை ஜோதிகாதான் இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

இதனால் படம் நிச்சயம் தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை பெற்றது. இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்தப் படம் அமேஸான் ப்ரைம் மொபைல் அப்ளிகேஷனில் நேற்றிரவு ரிலீஸானது.

தமிழ் ராக்கர்ஸில்

தமிழ் ராக்கர்ஸில்

திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோஸ்தர்கள் எதிர்ப்பை மீறி பொன்மகள் வந்தாள் படம் அமேஸானில் நேற்று இரவு 12 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அமேஸானில் படம் ரிலீஸாவதற்கு முன்பே ஹெச்டி குவாலிட்டியில் தமிழ் ராக்கர்ஸிஸ் அந்தப் படம் வெளியானது.

மொபைலில்..

மொபைலில்..

இதனால் அமேஸான் ப்ரைமும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. வழக்கமாக திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் போது அவற்றை ஸ்க்ரீனில் இருந்து மொபைல் போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிடுவார்கள்.

விசில், கைத்தட்டல்

விசில், கைத்தட்டல்

அதில் ரசிகர்கள் கத்துவது, விசில், கைத்தட்டல் என அனைத்தும் பதிவாகியிருக்கும். ஏன் சில ஸ்க்ரீனுக்கு வெளியே ரசிகர்கள் நடப்பது கூட அதில் பதிவாகியிருக்கும். இதனால் திரைப்படத்தை தெளிவாக பார்க்க முடியாது. ஏதோ ஒரு டிஸ்டர்பன்ஸ் இருந்து கொண்டே இருக்கும்.

ஹெச்டி குவாலிட்டி

ஹெச்டி குவாலிட்டி

டயலாக்குகளை கூட தெளிவாக கேட்க முடியாத சூழல் இருக்கும். இந்நிலையில் அமேஸான் ப்ரைமில் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக அதே தரத்தில் ஹெச்டி குவாலிட்டியில் தமிழ் ராக்கர்ஸில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ரிலீஸ்க்கு முன்பே படம் இப்படி லீக்காகியிருப்பது ஒட்டு மொத்த திரைத்துறையையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

PONMAGAL VANDHAL TEAM INTERACTION | VINODHINI | AKALYA | VJ ASHIQ | FILMIBEAT TAMIL
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த ஆண்டில் லாக்டவுனுக்கு முன்பாக வெளியான தர்பார், பட்டாஸ், சைக்கோ மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக நேரடி உத்தரவை பிறப்பித்துள்ள போதும் தமிழ் ராக்கர்ஸ் வெவ்வேறு டொமைன்களில் அவர்களின் பணியை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X