»   »  காலண்டர்ல குறிச்சிக்கோங்க ஞானவேல்ராஜா, இந்த நாள்.. தமிழ் ராக்கர்ஸ் தடாலடி பதில் சவால்!

காலண்டர்ல குறிச்சிக்கோங்க ஞானவேல்ராஜா, இந்த நாள்.. தமிழ் ராக்கர்ஸ் தடாலடி பதில் சவால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் கேலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பிப்ரவரி 9ம் தேதி உங்கள் நாள் அல்ல எங்களின் நாள் என தமிழ் ராக்கர்ஸ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பதில் அளித்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில் சூர்யாநடித்துள்ள சிங்கம் 3 படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தை 9ம் தேதி காலை 11 மணிக்கு ஃபேஸ்புக் லைவில் வெளியிடுவோம் என்று படங்களை ரிலீஸான உடன் இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.


Tamil Rockers replies to Gnanavel Raja

இதை கேட்ட படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடுப்பாகி எங்கள் படத்தை லைவாக வெளியிட்டால் தமிழ் ராக்கர்ஸை சிறையில் தள்ளாமல் விட மாட்டேன் என சவால் விட்டுள்ளார்.


இதையடுத்து தமிழ் ராக்கர்ஸ் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


ஞானவேல்ராஜா நல்ல உரை சார். உங்கள் கேலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பிப்ரவரி 9ம் தேதி உங்கள் நாள் அல்ல எங்களின் நாள் என தெரிவித்துள்ளனர்.

English summary
Tamilrockers.com posted in their FB page saying, '#GnanavelRaja Nice speech sir👏👏 #MarkYourCalender February 9th is not your day our day.. #Tamilrockers.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil