முரட்டு சிங்கிள் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ்…. புது அப்டேட் வெளியிட்ட படக்குழு!

சென்னை : பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் பிரேம்ஜிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி தீக்சித் நடிக்கிறார்.

மேலும், பிரேம்ஜியே இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது தந்தை கங்கை அமரன் பாடல்களை எழுதுகிறார்.

திறமையானவர்

திறமையானவர்

நடிகர்,பாடகர், இசையமைப்பாளர் எனபல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி அமரன். இவர் சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தில் அவரின் நண்பனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

டைமிங் காமெடி

டைமிங் காமெடி

சந்தோஷ் சுப்ரமணியன், சரோஜா,சிலம்பாட்டம்,கோவா, மங்காத்தா, பிரியாணி, வடகறி என வரிசையாக பலத் திரைப்படங்களில் நடித்தார். இவரின் டைமிங் கமெடிக்கு என்றே இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் உண்டு. தன்னை எப்போதும் முரட்டு சிங்கிள் என்று சொல்லிக்கொண்டு அவ்வப்போது சிங்கிள்ஸ்களை மகிழ்விந்து வருகிறார். சமீபத்தில் இவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.

பாராட்டுக்களை பெற்றது

பாராட்டுக்களை பெற்றது

பாடகரான இவர், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் ஸ்லம் ஆத்தம் பாடலை பிரேம்ஜி, கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து பாடியுள்ளார். இணையத்தில் வெளியான இந்தபாடல் அனைவரின் பாரட்டுகளை பெற்று வருகிறது.

ஹீரோவாக

ஹீரோவாக

பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது. நடிகை மீனாட்சி தீக்சித் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பரணி ஜெயபால் இயக்குகினார். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். அவரது தந்தை கங்கை அமரன் பாடல்களை எழுதுகிறார்.

மாலை 5 மணிக்கு

மாலை 5 மணிக்கு

இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். இந்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X