லைகா கேஸ் போட்டும் 2.0 படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: ஆனால்...
Recommended Video

சென்னை: 2.0 படம் ரிலீஸான வேகத்தில் அதை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2.0 படம் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை எடுத்துள்ளார் ஷங்கர் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
2.0 படத்தை திருட்டுத்தனமாக வெளியிட 12 ஆயிரத்து 567 இணையதளங்களுக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் தமிழ் ராக்கர்ஸ் புதிய படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக லைகா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி 2.0 படத்தை முறைகேடாக வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு சொந்தமான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உள்பட 12 ஆயிரத்து 567 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
அந்த தடையையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் படத்தை வெளியிட்டுள்ளது. இது 3டி படம் என்பதால் தியேட்டர்களில் 3டி கண்ணாடி அணிந்து பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











