அருண் விஜய் – ஏவிஎம் கூட்டணியில் வெளியாகும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ்: உண்மைகள் வெளிவருமா?

சென்னை: தமிழ்த் திரையுலகில் மிகவும் பிரபலமான ஏவிஎம் நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

அறிழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற வெப் சீரிஸை ஏவிஎம் தயாரித்துள்ளது.

வரும் 19ம் தேதி சோனி ஓடிடியில் வெளியாகும் 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ், திருட்டு இணையத்தளமான தமிழ் ராக்கர்ஸை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

திரையுலகை அதிர வைத்த தமிழ் ராக்கர்ஸ்

திரையுலகை அதிர வைத்த தமிழ் ராக்கர்ஸ்

கனவுத் தொழிற்சாலை என்றழைக்கப்படும் திரையுலகம் வெற்றி, தோல்வி, பிரமாண்டம் என பல அடுக்குகளைக் கொண்டது. இதில் நம்பிக்கையுடன் களமிறங்கி வெற்றிகொடி நாட்டியவர்களும் உண்டு, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடியவர்களும் அதிகம். இவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய சவாலாக அமைந்தது தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரஸி வலைத்தளம்.

பாரபட்சமின்றி புதுப் படங்கள் ரிலீஸ்

பாரபட்சமின்றி புதுப் படங்கள் ரிலீஸ்

படங்களை பார்க்க வேண்டுமானால் திரையரங்குகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தை உடைத்து நொறுக்கியதில் தமிழ் ராக்கர்ஸ்க்கு பெரும் பங்குண்டு. புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியான அன்றோ அல்லது, அதற்கு முன்னதாகவே படங்களை ரிலீஸ் செய்த அனைவரையும் மிரள வைத்தது தமிழ் ராக்கர்ஸ். அதுவும் படங்களை ஹெடி தரத்தில் ரிலீஸ் செய்து, திரையுலகையே துவம்சம் செய்தது.

யார் இந்த தமிழ் ராக்கர்ஸ்?

யார் இந்த தமிழ் ராக்கர்ஸ்?

பெரிய நட்சத்திரம், சின்ன நடிகர்கள் என பாரபட்சமின்றி அனைவரது படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. இதனால், தயாரிப்பாளர்கள் முதல் திரையரங்க உரிமையாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து பல புகார்கள் போராட்டங்கள் நடத்தியும் 'தமிழ் ராக்கர்ஸ்' யார் என இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது தமிழ் ராக்கர்ஸின் ஆட்டம் அதிகம் இல்லையென்றாலும், புதிதாக 'டெலிகிராம்' புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

மீண்டும் தயாரிப்பில் களமிறங்கிய ஏவிஎம்

மீண்டும் தயாரிப்பில் களமிறங்கிய ஏவிஎம்

தமிழ்த் திரையுலகில் பாரம்பரியமான ஏவிஎம் நிறுவனம், நீண்ட வருடங்களாக படங்கள் தயாரிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது முதன்முறையாக 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற வெப் சீரிஸ்ஸை தயாரித்துள்ளனர். அறிவழகன் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் வரும் 19ம் தேதி சோனி ஓடிடியில் 8 எபிசோட்களாக வெளியாகிறது.

உண்மைகள் வெளிவருமா?

உண்மைகள் வெளிவருமா?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி, கவனம் ஈர்த்திருந்தது. அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தத் தொடர், தமிழ் ராக்கர்ஸ் யார் என்பதை கண்டறியும் பின்னணியில், க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என இத்தனை ஆண்டுகளாக விடை தெரியாமல் உள்ளது. இந்நிலையில், 'தமிழ் ராக்கர்ஸ்' தொடர் மூலம் அந்த உண்மைகள் வெளிவருமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏவிஎம் நிறுவனத்தின் நம்பிக்கை

ஏவிஎம் நிறுவனத்தின் நம்பிக்கை

ஏவிஎம் சார்பில் அருணா, அபர்ணா இருவரும் இணைந்து, 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்ஸை தயாரித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அருணா, "தமிழ் ராக்கர்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம், அதனை பின்னணியாகக் கொண்டு திரைப்படம் எடுக்க நினைத்தோம். ஆனால், அதை இரண்டரை மணிநேரத்தில் சொல்ல முடியாது என்பதால், 8 எபிசோட்கள் கொண்ட வெப் சீரிஸ்ஸாக தயாரித்துள்ளதாகக்" கூறியுள்ளார். "இந்தத் தொடரைப் பார்க்க எனது தாத்தா ஏவிஎம் சரவணன் ரொம்ப ஆர்வமாக இருப்பதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் படங்கள் தயாரிக்க உள்ளதாகவும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

ஏவிஎம் நிறுவனத்துடன் முதல் கூட்டணி

ஏவிஎம் நிறுவனத்துடன் முதல் கூட்டணி

இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் குறித்து பேசியுள்ள அருண்விஜய், "ஏவிஎம் தயாரித்த படங்களில் அப்பா விஜயகுமார் நடித்துள்ளார். நான் இதுவரை அவர்களது ஸ்டூடியோவில் மட்டுமே நடித்தேன், இப்போது ஏவிஎம் தயாரிப்பிலும் முதன்முறையாக நடித்துள்ளதாக" பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும், "தமிழ் ராக்கர்ஸ் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப முக்கியமான கதை" என்றும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X