விவாகரத்தாகி 3 ஆண்டு.. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை!

சென்னை: நடிகை நிவேதிதா பங்கஜ், தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சுரேந்திரனை கடந்த பிப்ரவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை நிவேதிதாவிற்கு கடந்த வாரம், தடபுடலாக வளைகாப்பு நடந்துள்ளது.

ராதிகா சரத்குமார் இயக்கிய வாணி ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நிவேதிதா பங்கஜ், பிறகு கல்யாண பரிசு, மகராசி, திருமகள், சுந்தரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த பிரபலமானவர். முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிவேதிதா மிகவும் சிரமப்பட்டு சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹீரோயினாக மாறினார்.

nivedhitha pankaj pregnant photos

நிவேதிதா பங்கஜ்: அப்போது தான் மகராசி சீரியலில் நடித்த போது, தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகர் ஆரியனை காதலித்தார். இதையடுத்து 2019ம் ஆண்டு, அந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த போதே இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வந்த நிவேதிதா திடீரென சில மாதங்களுக்கு முன் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். மீண்டும் நடிக்க வந்த நிவேதிதாவிற்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வில்லி , குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

nivedhitha pankaj pregnant photos

விவாகரத்து ஆகிவிட்டது: இதையடுத்து சீரியலில் நடித்து வரும் சுரேந்திரனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டார். இதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய், ஒரு திருமணம் ஆன பெண், வேறு ஒரு ஆணுடன் இப்படி இருக்கலாமா என கேள்வி எழுப்ப, ஆரியனுக்கும் எனக்கும் விவாகரத்தாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், இப்போது நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன என்று கேள்வி கேட்டு ரசிகர்களை அதிரவைத்தார்.

nivedhitha pankaj pregnant photos

இரண்டாவது திருமணம்: கடந்த ஆண்டு முடிவடைந்த மகராசி சீரியலில் வில்லியாக நடித்திருந்தார் நிவேதிதா. அந்த சீரியலில் சுரேந்தர் ஹீரோக நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அதை இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தங்களது காதலை அறிவித்தனர். தற்போது சுரேந்திரன் மலர் சீரியலில் நடித்து வரும் நிலையில், இருவரும் காதலை பெற்றோரிடம் சொல்லி, கடந்த பிப்ரவரி மாதம் தடபுடலாக திருமணம் நடைபெற்றது.

nivedhitha pankaj pregnant photos

நிறைமாத கர்ப்பம்: இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது மாதமே ஆனநிலையில், நிவேதிதா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து கணவருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்தார். இதையடுத்து கடந்த வாரம் நிவேதிதாவிற்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பெற்றோராக போகும் இந்த தம்பதிகளுக்கு இவர்களின் ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X