பிக் பாஸ் வீடா? இங்கிலீஸ்காரன் கம்பெனியா?.. ஆனாலும் குபீர் குபீர்னு தமிழ் நல்லா பேசுறாங்களே!
சென்னை : பிக் பாஸ் சீசன்5 அக்டோபர் 3ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் பெரும்பாலானோர் அறிமுகம் இல்லாதவர்களாகவே இருந்தனர்.
நேற்று ஒளிபரப்பான முதல் எபிசோடில் டாஸ்க் ஏதும் இல்லாமல் 4 டீம் கேப்டன்கள் பிரிக்கப்பட்டனர்.
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பார்ப்பதற்கு இங்கிலீஸ்காரர்களைப் போல் இருந்தாலும் நன்றாக தமிழ் பேசுறாங்க என்று ட்விட்டர் வாசிகள் அவர்களை வைத்து தமிழ் ஆராய்ச்சியே செய்துள்ளனர்.

முதல் எபிசோடு
நேற்று பிக் பாஸ் சீசன் 5, முதல் நாள் எபிசோடு ஒளிபரப்பானது. அதில் ஆரம்பமே அசத்தல் என்பது போல வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் ஒலிபரப்பான உடல் போட்டியாளர்கள் தங்கள் பங்குக்கு ஆட்டம் போட்டனர்.

டீம் கேப்டன்கள்
இதையடுத்து கேப்டகள் டாஸ்குகள் இல்லாமல் தானாக முன் வந்தனர். இதில் பாத்ரூம் கிளினிங் டீம் கேப்டனாக ராஜுவும், கிச்சன் டீம் கேப்டனாக சின்ன பொண்ணுவும், ஹவுஸ்கீப்பிங் கிளினிங் டீம் கேப்டனாக பவானி ரெட்டியும், பாத்திரம் கழுவும் டீம் கேப்டனாக நமிதா மாரிமுத்துவும் உள்ளனர்.

பெயரில் குழப்பம்
இதையடுத்து, ராஜு தாமரை செல்வியை அழைத்து பேய் சொல்ல ஆரம்பித்து அவரை பயமுறுத்துகிறார். மேலும், அந்த இடத்தில் இருந்த ராப் பாடகி ஜக்கி மற்றும் ஆக்ஷரா விழுந்து விழுந்து சிரித்தனர். பெயர்கள் மற்றும் முகங்களை ஞாபகம் வைத்துக்கொள்வதில் நமக்கு மட்டும்தான் சிரமம் போல என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், நேற்றைய எபிசோடு பார்த்தபிறகுஇதையடுத்து, ராஜு தாமரை செல்வியை அழைத்து பேய் கதை சொல்ல ஆரம்பித்து அவரை பயமுறுத்துகிறார். மேலும், அந்த இடத்தில் இருந்த ராப் பாடகி ஜக்கி மற்றும் ஆக்ஷரா விழுந்து விழுந்து சிரித்தனர். பெயர்கள் மற்றும் முகங்களை ஞாபகம் வைத்துக்கொள்வதில் நமக்கு மட்டும்தான் சிரமம் போல என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், நேற்றைய எபிசோடு பார்த்தபிறகு, உள்ளே இருப்பவர்களுக்கும் அதில் சிக்கல் இருப்பது தெரிகிறது. , உள்ளே இருப்பவர்களுக்கும் அதில் சிக்கல் இருப்பது தெரிகிறது.
Recommended Video

தமிழ் பேசும் இங்கிலீஸ்காரன்
இந்த வீட்டில் அக்ஷரா ரெட்டி, ஸ்ருதி, ஐக்கி பெரி, நதியா செங், நிரூப் போன்றவர்களை பார்க்கும் போது, என்னடா...இது... இந்தி பிக் பாஸோ என்று குழம்பத்தோன்றுகிறது. பார்ப்பதற்கு அனைவரும் இங்கிலீஸ்காரர்கள் போல இருக்கிறார்கள். குறிப்பாக ஐக்கி பெரியின் தலை முடி ஸ்டைல் அல்டிமெட் என்று சொல்ல வைக்கிறது. என்னதான் பார்க்க இங்கிலீஸ்காரர்கள் போல இருந்தாலும் அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். பவானி மற்றும் நிரூப்-க்கு மட்டும் தமிழ் கொஞ்சம் கொஞ்சமா வருது என்று நெட்டிசன்கள் இவர்களை வைத்து ஒரு தமிழ் ஆராய்ச்சியே செய்து முடித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











