நவம்பரில் 'வாலு', டிசம்பரில் 'இது நம்ம ஆளு'.?
சென்னை: நவம்பரில் 'வாலு' திரைப்படமும், டிசம்பரில் 'இது நம்ம ஆளு' திரைப்படமும் வெளியாகும் எனத் தெரிகிறது.
கடந்த 2012ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தைத் தொடர்ந்து இதுவரை சிம்பு படம் எதுவும் ரிலீசாகவில்லை. அப்போது தொடங்கப்பட்ட வாலு, வேட்டை மன்னன் படங்கள் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாரா ஜோடியாக இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. தொடர்ந்து பட வேலைகளில் பிசியாக இருந்தாலும் இன்னமும் பட ரிலீஸ் குறித்து தகவல் எதுவும் இல்லையே என சிம்பு ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில், தற்போது தனது பட ரிலீஸ் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சிம்பு. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-

நவம்பரில் வாலு...
வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர். பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நவம்பரில் 'வாலு' திரைப்படம் வெளியாகும்.

எனது கடமை...
ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்து விட்டேன். என்னுடைய ரசிகர்களைப் போலவே நானும் எனது படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன்.

இறுதி கட்டத்தில்...
இது நம்ம ஆளு படத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. 'இது நம்ம ஆளு' கண்டிப்பாக டிசம்பரில் வெளியாகும்.

தொடர்ந்து ரிலீஸ்...
நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்...
இப்படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும், அதனைத் தொடர்ந்து சிம்புவே இயக்கி ஒரு படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











