twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரவாரமில்லாமல்..வெளியாகி சக்கைபோடு போட்ட.. தமிழ் திரைப்படங்கள்!

    |

    சென்னை : இப்பொழுதுள்ள சூழலில் என்னதான் உச்ச நடிகர்களே நடித்து இருந்தாலும் அந்த படத்திற்கு கண்டிப்பாக மினிமம் விளம்பரங்கள் தேவைப்படுகிறது.

    Recommended Video

    OTT ல் கலம் இறங்கும் Raghava Lawrence • Horror Series

    இவ்வாறு பயங்கரமான பில்டப் கொடுத்த பல பெரிய நடிகர்களின் படங்களும் தோல்வியை தழுவிய கதைகள் பல இங்கு உண்டு.

    இந்த நிலையில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி சத்தமில்லாமல் வந்து சக்கை போடு போட்ட சில தமிழ் படங்களை இங்கு நாம் காண்போம்

    எவ்ளோ பெரிய ஐஸ்க்ரீம்.. நாக்கை நீட்டும் பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோஸ்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!எவ்ளோ பெரிய ஐஸ்க்ரீம்.. நாக்கை நீட்டும் பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோஸ்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

    புதுமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கி சமீபத்தில் வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் துல்கர் சல்மான், இயக்குனர் கௌதம் மேனன், ரித்து வர்மா விஜே ரக்சன், நிரஞ்சனி அகத்தியன் போன்ற நமக்கு மிகவும் பரிச்சயமான நடிகர்கள் நடித்திருந்த இந்தப் படம் உருவாகி சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு எப்போது வெளியிடப்படும் என அனைவரும் காத்துக் கொண்டிருந்த வேளையில் சமீபத்தில் திரையில் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத நிலையில் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டு சுவாரஸ்யமான காட்சிகளை கொண்ட இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

    ரசித்து பார்த்தனர்

    ரசித்து பார்த்தனர்

    இந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக பலராலும் கொண்டாடப்பட்டது. இப்படி ஒரு படம் வருகின்றது என பலருக்கும் தெரியாத நிலையில் திரையரங்குகளில் வெளியாகி பலராலும் பாராட்டப்பட்ட பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை பார்த்து ரசித்து பாராட்டி மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவெடுத்தது.

    சென்னை 28

    சென்னை 28

    ஏப்ரல் மாதத்தில், சிவகாசி, ஜீ போன்ற படங்களில் துணை நடிகராக நடித்துவந்த வெங்கட்பிரபு முதன்முதலாக இயக்குநராக சென்னை-28 படத்தின் மூலம் அறிமுகமானார். முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் இப்போது பல இளம் நடிகர்களை உருவாக்கி உள்ளது.

    வசூலை வாரி குவித்தது

    வசூலை வாரி குவித்தது

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சென்னை-28 எதார்த்தமான காமெடி நிறைந்த பல காட்சிகளுடன் தொடங்கியது முதல் இறுதி வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவும் பலரையும் ரசிக்க வைத்தது. இவ்வாறு முற்றிலும் புதுமுகங்கள் மட்டுமே நடித்திருந்த இந்த படம் வெளியான புதிதில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பின் பலராலும் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலை வாரி குவித்து இன்றும் பலருக்கு பிடித்தமான ஒரு படமாக இருந்து வருகிறது.

    அஞ்சாதே

    அஞ்சாதே

    இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானார். இதற்கு முன் காதல் வைரஸ், ஜித்தன் போன்ற படங்களில் பணியாற்றி வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அனைத்து இயக்குனர்களும் மாஸ், கிளாஸ், காமெடி, செண்டிமெண்ட் என சென்று கொண்டிருந்த வேளையில் டார்க் பிலிம் படங்களை எடுக்க ஆரம்பித்தார் மிஸ்கின்.

    கொண்டாடினர்

    கொண்டாடினர்

    சித்திரம் பேசுதடி படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய இரண்டாவது படம் அஞ்சாதே வெளியானபோது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பின் இந்த படத்தைப் பற்றிய நேர்மறையான விமர்சனங்கள் வர அனைவரும் இந்த படத்தை தூக்கி வைத்துக் கொண்டாடி மிகப்பெரிய வெற்றி படமாக உருவாக்கி பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.சித்திரம் பேசுதடி படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய இரண்டாவது படம் அஞ்சாதே வெளியானபோது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பின் இந்த படத்தைப் பற்றிய நேர்மறையான விமர்சனங்கள் வர அனைவரும் இந்த படத்தை தூக்கி வைத்துக் கொண்டாடி மிகப்பெரிய வெற்றி படமாக உருவாக்கி பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.

    பிச்சைக்காரன்

    பிச்சைக்காரன்

    ரோஜாக்கூட்டம், பூ, டிஷ்யூம் போன்ற காதல் படங்களை தொடர்ந்து எடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் சசி முதன்முதலில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் பிச்சைக்காரன் என்ற படத்தில் இணைந்தார். மகன் தனது அம்மாவிற்காக 48 நாட்கள் யாருக்கும் தெரியாதவாறு பிச்சைக்காரனாக வாழ வேண்டும் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த படம். நான் படத்திற்கு பிறகு தொடர்ந்து தோல்வி படங்களிலும் சுமாரான படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் மிகப்பெரிய வெற்றி பெற்று தந்தது.

    பல மொழிகளில் ரீமேக்

    பல மொழிகளில் ரீமேக்

    வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களைப் போலவே இந்தப்படமும் இருக்கும் என பலரும் நினைத்து வந்த நிலையில் பிச்சைக்காரன் வெளியாகி பலரையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இயக்குனர் சசி இயக்கிய படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் பிச்சைக்காரன் என்ற அங்கீகாரத்தை பெற்று இருக்கும் அதே சமயம் இந்த படம் தெலுங்கில் பிச்சகாடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் மாபெரும் பெரிய வெற்றியடைந்து வசூல் சாதனை புரிந்தது. தமிழ், தெலுங்கு வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடா, ஒடியா, மராத்தி போன்ற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

    English summary
    Tamil super hit movies
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X