Vijay: ஆளுநரை சந்தித்த விஜய்.. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய மனு..30 நிமிடம் என்ன பேசினார்!
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி உள்ள நடிகர் விஜய், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தார். இவர்களின் சந்திப்பு 30 நிமிடம் நடந்தது.
திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் தனக்கென அரசியலில் ஓர் இடம் பிடிப்பதற்காக தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதன் முதல் மாநாடு விக்ரவாண்டியில் நடைபெற்றது. மாநாட்டு மேடையில் கட்சியின் கொள்ளைகளை அறிவித்து உற்சாகமாக பேசினார். இதைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் பயணம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தமிழக ஆளுநர் என் ஆர் ரவி, ஆளுநர் மாளிகையில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இவர்களின் சந்திப்பு 30 நிமிடத்திற்கு மேல் நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அண்ணனாக துணை நிற்பேன்: முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் காலை, பெண்களின் பாதுகாப்பு குறித்து தனது கைப்பட கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், அன்புத் தங்கைகளே. தமிழகத்தில் கல்வி வளாகம் முதல் கொண்டு, ஒவ்வொரு நாளும் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அணைத்துத் தரப்பும் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் வழங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் சென்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்டைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் ஆணாகவும். எனவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் சவனம் செலுத்துங்கள் என கடிதம் எழுதி இருந்தார்.


Click it and Unblock the Notifications











