Vijay: ஒரு முடிவோடுதான் வந்து இருக்கிறேன்.. வாள் ஏந்தி போஸ் கொடுத்த விஜய்!

சென்னை: விஜய்யின் அரசியல் பயணத்தில் இன்று முக்கியமான நாள் என்று சொல்லலாம், மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார், என்ன சொல்லபோகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அனைவரும் எதிர்பார்த்தது போலவே முதல் மாநாட்டு மேடையிலேயே தெறிக்கவிட்டுவிட்டார் விஜய்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அந்த மாநாட்டிற்காக சுமார் 85 ஏக்கர் பரப்பரளவில் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை வாடகைக்கு வாங்கி, ஜார்ஜ் கோட்டை வடிவத்தில் செட் அமைத்து இருந்தனர். மாநாட்டுக்காக மொத்தம் 80 ஆயிரம் பேருக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், மாநாட்டில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டு இருந்தது.

tamilaga vetri kazhagam vijay speech

முதல் மாநாடு: இந்த மாநாட்டுக்காக கடந்த ஒரு வாரமாக விக்ரவாண்டி திருவிழாக்கோலமாக இருந்தது. இந்த நாட்டில் கலந்து கொள்வதற்காக பல ஊர்களில் இருந்த பேருந்து,வேன், கார், இருசக்கர வாகனத்தில் பலர் வந்து இருந்தனர். மாநாடு நான்கு மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது போல சரியாக நான்கு மணிக்கு மாநாடு தொடங்கியது. விஜய்க்காக அமைக்கப்பட்ட மேடையில் கட்சிக் கொடியுடன் விஜய் நடந்து வந்தார். இதையடுத்து தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. முதலில் உறுதி மொழி எடுக்கப்பட்டு கட்சியின் கொடி பறக்கவிடப்பட்டது. இதையடுத்து கட்சியின் கொள்கை மற்றும் செயற்கொள்கை வாசிக்கப்பட்டது.

வெள்ளி வீரவாள் பரிசு: இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு வெள்ளி வீரவாளை பொதுச் செயலாளர் ஆனந்த் பரிசாக வழங்கினார். மேலும், அரசியலமைப்பு புத்தகம், திருக்குறள், பகவத் கீதை ஆகியவையும் பரிசாக வழங்கப்பட்டது இதை பெற்றுக்கொண்ட விஜய், அந்த வாளுடன் போஸ் கொடுத்தார்.

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்: அதன்,மக்களிடம் பேசிய விஜய், பெரியார், அண்ணா, காமராஜர் மற்றும் அம்பேத்கர் வகுத்த வழியில் நாம் பயணிப்போம். பெரியாரின் "கடவுள் மறுப்பு கொள்கையை நாம் எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை காரணம் "ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்" என்கின்ற கோட்பாடுடன் நாம் பயணிப்போம். யார் வந்தாலும் அவர்களுக்கு ஒரு சாயத்தை பூசிவிடுகிறார்கள்.

திராவிட மாடல்: இங்கு ஒரு கூட்டம் கொஞ்ச காலமாக ஒரே பாட்டை திரும்ப திரும்ப பாடிக் கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்டட் சாயத்தை அவங்க மேல பூசிவிட்டு. இவங்க மட்டும், உள்ளுக்குள்ள வேற விதமான டீலிங் எல்லாம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் விரோத அரசியலை நடத்திவிட்டு, அதற்கு திராவிட மாடல் அரசு என்று பெயரிடும் அனைவருக்கும் எதிராக நாம் செயல்பட வேண்டும் என்றும், என் பேச்சிலிருந்து நான் பின்வாங்க போவதில்லை.

சிலர் விஜய், யார் பேரையும் சொல்லாமல், மறைச்சி மறைச்சி பேசுறாரு பயமா என சிலர் பேசுகிறார்கள். ஆனால், அரசியலுக்கு அவர்களை விமர்சனம் செய்யவோ,தரக்குறைவாக பேசவோ வரவில்லை. ஆனால் என்ன சொல்ல வேண்டுமோ அதை நேரடியாக சொல்லுவேன். நான் ஒரு முடிவோடு தான் வந்து இருக்கேன், இனிமேல் இதில் இருந்த பின்வாங்க மாட்டேன் என்று முதல் மாநாட்டிலேயே திமுக, பாஜக என அனைவரையும் வச்சு செய்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X