234 தொகுதியில் தவெக ப்ளான்… ‘தனி ஒருத்தன் வெடிச்சு வாரான்’ பாடலால் தேர்தல் களம் தீப்பிடித்தது!

சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு, விறுவிறுப்பாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி, 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் தனித்துவமான அரசியல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் கட்சி செயல்பட்டு வருகிறது.

தவெக பிரச்சார பாடல்: இந்த அரசியல் பரபரப்பான சூழலில், கட்சியின் பிரச்சாரத்திற்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் வகையில் தவெக தனது அதிகாரப்பூர்வ பிரச்சாரப் பாடலை வெளியிட்டுள்ளது. 'தனி ஒருத்தன் வெடிச்சு வாரான்... விசிலு ஒன்னு அடிச்சி வாரா' என தொடங்கும் இந்த பாடல், இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த வரிகளும், வேகமான இசையுடன் விஜய்யின் அதிரடியான குரலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைமை வெளியிட்ட இந்த பாடல், சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக இளைஞர் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், தமிழக வெற்றிக்கழக கட்சியின் அடையாளத்தையும், அதன் அரசியல் நோக்கத்தையும் வலியுறுத்துகிறது.

Vijay Thalapathy TVK

தொண்டர்கள் மகிழ்ச்சி: மேலும், தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தனது பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறது. பொதுக்கூட்டங்கள், வீதி சந்திப்புகள், டிஜிட்டல் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வாக்காளர்களை அணுக கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த புதிய பிரச்சாரப் பாடல், கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் உற்சாகத்தை கூட்டும் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

வேட்பு மனு தாக்கல்: 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்கான மார்ச் 31ந் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். ஏப்ரல் 2ந் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X