TVK Vijay: மாணவர்கள் காத்துகிட்டு இருக்க கூடாது நண்பா.. உதவித் தொகை வழங்க முதல் ஆளாகச் சென்ற விஜய்!
சென்னை: நடிகர் விஜய் கடந்த ஆண்டு தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு தான் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் சார்பில் வழங்கி வருகின்றார். கடந்த ஆண்டு ஒரே நாளில் வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை இந்த ஆண்டு இரண்டு நாட்களாக பிரித்து வழங்கப்பட முடிவு செய்யப்பட்டு முதல் கட்டம் கடந்த ஜூன் 28ஆம் தேதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 3ஆம் தேதி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

முதல் ஆளாக: இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் விழா நடைபெறவுள்ள திருவான்மியூர் மண்பத்திற்கு முதல் ஆளாகச் சென்றுள்ளார். உதவித் தொகை பெறும் மாணவ மாணவிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து தங்களது பெற்றோர்களுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக நீண்ட நேரம் காத்துக்கொண்டு இருக்ககூடாது என்ற எண்ணத்தில் மிக விரைவில் மண்பத்திற்கு விஜய் வந்ததாக கூறப்படுகின்றது.

விஜய் பேச்சு: கடந்த 28ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், "மாணவர்களாகிய நீங்கள் எப்போதும் போதைப் பொருளுக்கு 'நோ' சொல்ல வேண்டும் என பேசினார். போதைப்பொருட்களில் இருந்து அரசாங்கம் நம்மைக் காக்கவேண்டும் என்பதை விட நமது உடல் நலத்தின் மீது நாம்தான் அதிக அக்கறையுடன் செயல்படவேண்டும். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.படித்தவர்கள் தலைவர்களாக வரவேண்டும். போதையினால் உங்களின் அடையாளத்தை இழந்து விடாதீர்கள். இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் அதிகமாக இருப்பதைப்பார்க்கும்போது எனக்குமே அச்சமாகத்தான் இருக்கின்றது. " Say No To Temporary Pleasures, Say No To Drugs"என விஜய் இரண்டு முறை கூற மாணவர்கள் திரும்பச் சொன்னார்கள்.

விமர்சனத்திற்கு பதிலடி: இதுமட்டும் இல்லாமல் மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கல்வியுடன் சேர்த்து தினமும் செய்தித் தாள்களைப் படிக்கவேண்டும். செய்தித்தாள்களில் ஒரு செய்தியே பல்வேறு கோணங்களில் எழுதுவார்கள். நீங்கள் அதனை நன்கு ஆராய்ச்சி செய்து உண்மை எதுவென புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தன்மீதான விமர்சனங்களுக்கு மறைமுகமாக பதிலடியும் கொடுத்திருந்தார்.

விஜய் வீட்டு விருந்து: விஜய் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகின்றார் என்றாலே வந்தவர்களுக்கு திருப்திகரமான உணவு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பரிமாறப்படுகின்றது. கடந்து முறையே பலவேறு வகையான உணவு மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பரிமாறப்பட்டது. இம்முறையும் தடபுடலாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











