Movie Release This Week : தியேட்டரில் இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?

சென்னை : கடந்த வாரம் தமிழ்புத்தாண்டுக்கு ராகவா லாரன்ஸின் ருத்ரன், சமந்தாவின் சாகுந்தலம் படங்கள் தியேட்டரில் வெளியானது.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாகுந்தலம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து இந்த வாரம் விஜய் ஆண்டனியின் தமிழரசன், யானை முகத்தான், குலசாமி, யாத்திசை போன்ற படங்கள் வெளியாக உள்ளது.

Tamilarasan to Yaanaimugathan This week theatre release movie list

தமிழரசன்:இசையமைப்பாளர்,நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த பரிமாணங்களை எடுத்துவரும் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில், மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகி பாபு, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழரசன் படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

Tamilarasan to Yaanaimugathan This week theatre release movie list

யானை முகத்தான்:மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, தமிழில் இயக்குநராக அறிமுகமாக உள்ள படம் யானை முகத்தான். இதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஊர்வசி, கருணாகரன், ரமேஷ்திலக், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் என பலர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 21ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.

குலசாமி:நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். இப்படம் ஏப்ரல் 21ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.

Tamilarasan to Yaanaimugathan This week theatre release movie list

யாத்திசை:சரித்திரப் படமாக உருவாகியுள்ள யாத்திசை படத்தை அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். மற்ற அனைவரும் புதுமுகங்கள், அரசர் காலத்துப் பின்னணியில் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.

Tamilarasan to Yaanaimugathan This week theatre release movie list

Kisi Ka Bhai Kisi Ki Jaan (Hindi) : வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான கிசி கா பாய் கிசி கி ஜான் உலகம் முழுவதும் வரும் 21ந் தேதி வெளியாக உள்ளது. ஹிந்தியில் ரீமேக்காகியிருக்கும் வீரம் படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையை கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரும். இப்படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு தமிழ் ஆடியன்ஸ் அஜித் அளவுக்கு இல்லை என சல்மான் கானை கிண்டலடித்து வருகின்றனர்.

Hello Meera (Telugu) : ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஹலோ மீரா. இயக்குநர் ஸ்ரீனிவாசு ககர்லா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் கார்கேயி யெல்லபிரகதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக்குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ள நிலையில், படம் ஏப்ரல் 21ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X