சினிமா பிரபலங்கள் பங்கேற்கும்.. தமிழில்அறிவியல்.. சாதனைகளும் சவால்களும் நிகழ்ச்சி..எப்போது தெரியுமா?
சென்னை: தமிழில் அறிவியல் சாதனைகளும் சவால்களும் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி இன்று தரமணியில் நடைபெற உள்ளது. இன்று மாலை நான்கு மணி அளவில் தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் இ.கி.லெனின் தமிழ்க்கோவன், திரைப்பட இயக்குநர் ஆர்.ரவிக்குமார், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். ராமானுஜம், பேராசிரியர் த.வி.வெங்கடேஷ்வரன், திரைப்பட இயக்குநர் தீபக், சி.எஸ்.ஐ.ஆர் மூத்த விஞ்ஞானி பி.காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில், வெளியானத் திரைப்படம் அயலான். இந்த படத்தில் ஏலியனை மையப்படுத்தி அறிவியல் புனைவு படமான இயக்கி பெயர் எடுத்த இயக்குநரான ஆர்.ரவிக்குமார் கலந்து கொண்டு பேச இருக்கிறார். அதே போல விட்னஸ் படத்தை இயக்கி பெயர் எடுத்த தீபக் கலந்து கொண்டு சினிமாவில் வியாபித்து இருக்கும் அறிவியல் குறித்து பேச உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி @matsciencechannelல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில், ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.



Click it and Unblock the Notifications











